சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரி தேசிய பாடசாலையின் 70 ஆண்டு கால ஏக்கமாகவும் தேவையாகவும் இருந்த பழைய மாணவர் அமைப்பானது முதன் முதலாக நேற்று 2020.09.01ம் திகதி செவ்வாய்க்கிழமை எமது புதிய அதிபர் எச்.எம். அன்வர் அலி சேர் தலைமையில் மிகச்சிறப்பாக ஆரம்பித்து வைக்கப்பட்டது.
இந் நிகழ்வில் பாடசாலையின் முன்னாள் அதிபர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் தற்பொழுது கற்பிக்கும் ஆசிரியர்கள் பிரதி, உதவி அதிபர்கள் என பல்வேறு பட்டவர்கள் கலந்து சிறப்பித்தனர்.
முதலாவது பழைய மாணவர் அமைப்பின் தலைவராக பதவி வழியில் அதிபர் H.M . அன்வர் அலியும், ஆலோசகராக தென் கிழக்குப் பல்கலைக்கழக தலைமைப் பேராசிரியர் றமீஸ் அப்துல்லாஹ் அவர்களும், ஒய்வு பெற்ற அதிபர் ஷஹீட் சேர் அவர்களும், உப தலைவராக அம்பாறை மாவட்ட நீர்ப்பாசனப் பொறியியலாளர் U.L . நவாஸ் அவர்களும்,செயலாளராக சம்மாந்துறை சிலியட் நிறுவனத்தின் பணிப்பாளர் S.L. முஸ்தபா அவர்களும், உப செயலாளராக தென்கிழக்குப் பல்கலைக்கழக தகவல் தொழில்நுட்ப சிறப்பு கற்கை மாணவி S .L பாத்திமா றுக்சானா அவர்களும், பொருளாளராக கந்துறட்ட நிறுவன முகாமைத்துவ பணிப்பாளர் S.M . நபீர் அவர்களும், கணக்காய்வாளராக தாழங்குடா சிலியட் நிறுவனத்தின் கணக்காளர் S.A.ஜிப்ரி அவர்களும், ஏனைய உறுப்பினர்களாக ஒய்வு பெற்ற ஆசிரியர் A.L.M .யாசீன்(JP), ஒய்வு பெற்ற அதிபர் அபீறா சலீம், A.C .M .முஸ்தபா ஆசிரியர், தொழில் நுட்பக் கல்லூரி விரிவுரையாளர் M.A.நசீர், A.S. சுஹைறா ஆசிரியை, I. ரிபாயா ஆசிரியை, M.I. அச்சிமுஹமட் ஆசிரியர், M .T .M . நிஹார் ஆசிரியர் , A.L .S. றாசீயா ஆசிரியை, A.B .நௌபியா ஆசிரியை, தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர் M.S. சபானா, Y . முபாரக் (SEUSL ) M.I. நாசர் (SLPA ) ஆகியோர் ஏக மனதாக தெரிவு செய்யப்பட்டமை விசேட அம்சமாகும்.









