Ads Area

வாக்களித்த மக்களை மறந்து செயற்படும் உறுப்பினர்களைத் தெரிவு செய்தது யார் தவறு?


சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸின் ஆதரவினால் ஒரு தவிசாளர் நியமிக்கப்பட்டுள்ளார் என்பது எமக்கும் எம் கட்சிக்கும் மகிழ்ச்சி ஆன விடயம் என்றாலும் தவிசாளர் தொடர்ந்தும் சிறிலங்கா முஸ்லிம் காங்ரஸோடு  பயணிப்பார் என்பதை எவராலும் உறுதிப்படுத்த முடியுமா?


அவர் கட்சி மாறுவதும் சேர்வதும் அவருக்கும் அவரோடு இருப்பவர்களுக்கும் சாதாரணமாக இருந்தாலும் எவ்வித தேவையும் அற்ற சாதாரன மக்களுக்கு இது சாதாரனமான விடயம் அல்ல.

கடந்த பிரதேச சபைத்தேர்தலில் மயிலுக்கு வாக்களித்த மக்களுக்கு எந்தக் காரணத்தை சொல்வார். 

தவிசாளருக்கு வாக்களிக்காமல் அவரைப்பற்றி குறை கூறி அவருக்கு எதிராக பதிவிட்ட சில சகோதரர்கள் இன்று அவருக்கு வாழ்த்துச் சொல்லி அவரோடு நின்று போட்டோ பிடிப்பது என்பதை எவ்வாறு எடுத்துக் கொள்வது.

ஆழும் வர்க்கத்திற்கு கண்மூடித்தனமாக ஆதரவளிப்பதை விட்டு விட்டு கேள்வி கேட்கும் சமூகமாக நாம் மாற வேண்டும்.


மக்களால் அகில இலங்கை மக்கள் காங்ரசுக்கு சபை அதிகாரம் வழங்கப்பட்டது அன்று. சபை பிரதிநிதிகளால் சிறிலங்கா முஸ்லிம் காங்ரசுக்கு சபை அதிகாரம் வழங்கப்பட்டது இன்று.

இதில் வாக்களித்த மக்களிடம் எந்த உறுப்பினராவது கலந்தாலோசனை செய்து முடிவெடுத்தார்களா? இல்லை சுய விருப்பில் இயங்கினார்களா? சுய விருப்பம் எனில் இங்கு தீர்மானித்தது எது பணமா? பதவியா? வாக்களித்த மக்களை மறந்து செயற்படும் உறுப்பினர்களைத் தெரிவு செய்தது யார் தவறு?
தேர்தல் காலங்களில் எம்மை ஏமாற்றும் எவருக்கும் எதிராக செயற்பட நாம் தயாராக இருக்க வேண்டும்.

எம்மக்கள் எல்லோரும் மாற்றத்தை நோக்கி பயணிக்க தயாராக இருப்போம்.

Atham bawa Mubeen 
Sammanthurai
02/09/2020
Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe