Ads Area

உயர் அதிகாரிகளின் அசமந்த போக்கினால் காணாமல் போன 18 மில்லியன் ரூபா பெறுமதியான பாடசாலை கட்டிடம்.

 நூருல் ஹுதா உமர்

கல்முனை கல்வி வலய, சாய்ந்தமருது கல்வி கோட்டத்தின் கமு/கமு/அல்-ஹிலால் வித்தியாலத்தின் 18 மில்லியன் ரூபா பொறுமதியான மூன்று மாடிக்கட்டிடமானது 2019 ஆம் ஆண்டு பொறுகை நடைமுறைக்கு உட்படுத்தப்பட்டும். இது வரை அதனை தொழிநுட்ப  மதிப்பீட்டுக்கு உட்படுத்தப்படாமல் கிடப்பில் இருப்பது மிகப்பெரிய துரதிஸ்டமாகும். இது குறித்து அப்போது இருந்த உயர் கல்வி அதிகாரிகளே பொறுப்புக்கூற வேண்டும். அவர்கள் பொறுப்புடன் நடந்திருந்தால் இக்கட்டிடத்தினை கட்டி முடித்திருக்கலாம் என பாடசாலை அபிவிருத்திக்குழு செயலாளர் பொறியியலாளர் ஏ.எம். சாஹிர் குற்றம் சாட்டியுள்ளார்.

மேலும் கல்வி அதிகாரிகளின் அக்கறையின்மை , பொறுப்பற்ற செயற்பாடுகள் காரணமாக சாய்ந்தமருது கமு/ கமு/ அல்-ஹிலால் வித்தியாலயத்தில் ஏறத்தாள 18 வகுப்பறைப்பற்றாக்குறைகள் இருந்தும் ஒரு சிறந்த திட்டத்தினை இழந்து தவிக்கின்றது. இதனால் பாடாசாலைக்கூட்ட மண்டபத்தில் 4 வகுப்பறைகள் நடத்தப்பட்டு வருவதுடன், மாணவர்கள், ஆசிரியர்கள் தமது கற்றல், கற்பித்தல் செயற்பாடுகளை பலத்த சிரமத்திற்கு மத்தியில் நிறைவேற்றுவது இங்கு குறிப்பிடத்தக்கது.

ஆனால், இப்போது பதவியேற்றிருக்கும் வலயக்கல்விப் பணிப்பளர், மற்றும் வலயக்கல்விப் பொறியளாளர் ஜௌசி போன்றோர்கள் நேர்த்தியான நகர்வுகளை மேற்கொண்டிருப்பது பாராட்டத்தக்கது.

எனவே, எமது கல்லூரியின் இத்திட்டதினை மிக விரைவாக பெற்றுத்தருமாறு உரிய அதிகாரிகளிடம் நாங்கள் வினயாமாக வேண்டிக்கொள்கின்றோம். என தெரிவித்துள்ளார். இப்பாடசாலையிலிருந்தே ஒவ்வொரு ஆண்டும் அதிகமான புலப்பரிசில் சித்தியாளர்கள் தெரிவாகின்றனர் என்பது குறிப்பிட்டதக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe