சம்மாந்துறை மல்வத்தை கிராமத்தில் நள்ளிரவில் புகுந்த காட்டு யானைகள் சம்மாந்துறை பிரதேச சபைக்கு சொந்தமான உப அலுவலக கடைத்தொகுதியில் மூன்று கடைகளின் கதவுகளை உடைத்து அங்கிருந்த பொருட்களை யானைகள் சேதப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நௌஷாட் அவர்களினால் சேதங்களை உடனடியாக பார்வையிட்டு சேதங்கள் தொடர்பான அறிக்கையினை சமர்பிக்குமாறு பிரதேச சபை செயலாளர் எம்.ஏ.கே.முஹம்மட் அவர்களிடம் பணிப்புரை விடுத்தார்.
இதற்கமைவாக சம்மாந்துறை பிரதேச சபையின் தொழிநுட்ப உத்தியோகத்தர் ஏ.அப்துல் றஸாக் உள்ளிட்ட குழுவினரினால் (2020.10.13) நேரில் சென்று யானைகளினால் சேதப்படுத்தப்பட்ட கடைகளை பார்வையிட்டனர்.