(எம்.வை.அமீர்)
தென்கிழக்குப் பல்கலைக்கழக கலை கலாசார பீடத்தின் பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் அப்பல்கலைக்கழகத்தின் முதலாவது சமூகவியல் பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.இப்பதவி உயர்வு 05.09.2019 முதல் அமுலுக்கு வரும்வகையில் வழங்கப்பட்டுள்ளது.
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் கலை கலாசார பீடத்திலேயே கல்வி கற்று, அந்த பீடத்தின் பீடாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட இளம் விரிவுரையாளரான கலாநிதி றமீஸ் அபூபக்கர் தற்போது பேராசிரியராக பதவி உயர்வு பெற்றுள்ளார்.
இலங்கையின் முதலாவது முஸ்லிம் சமூகவியல் பேராசிரியராக இளம் கல்விமானும் சமூகச் செயற்பாட்டாளருமான பீடாதிபதி கலாநிதி றமீஸ் அபூபக்கர் சாய்ந்தமருதைப் பிறப்பிடமாக கொண்டவராவார்.
Thanks - Metro News