கொரோனாவினால் மரணமடைவோரை புதைப்பதா, எரிப்பதா என்பது பற்றிய பிரச்சினையில், இனியாவது, உலக சுகாதார ஸ்தாபனத்தின் விதந்துரைகளை நிராகரிக்கும் ஒரே நாடாக இருக்காதீர்கள் மேலும் இதனை அலி சப்ரி என்ற ஒருவரின் தலையில் போட்டு நழுவாதீர்கள். இது ஒரு சிறுபான்மை மத விவகார பிரச்சினை என்பதை உணருங்கள்" என எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச ஆளுங்கட்சினரிடம் பகிரங்கமாக கோரிக்கையினை முன்வைத்துள்ளார்.
பாராளுமன்றத்தில் இன்று பிரதமர், சுகாதார அமைச்சர், முன்னாள் சுகாதார அமைச்சர் மற்றும் முன்னாள் அமைச்சர் மனோகனேசன் முன்னிலையிலேயே எதிர்கட்சித் தலைவர் சஜித் பிரமதாச இதனைக் தெளிவாக கூறினார்..!!
தகவல் - பா.உ. மனோ கணேசன்.