கொழும்பு வைத்தியசாலை பிணவறையில் 5 கொரோனா சடலங்கள் சில நாட்களாக உள்ளதாக சுகாதார பிரிவு தெரிவித்துள்ளது.
உயிரிழந்து 24 மணித்தியாலங்கள் நிறைவடைவதற்கு முன்னர் கொரோனா தொற்றிய உடல் தகனம் செய்யப்பட வேண்டும். எனினும் தற்போது ஏற்பட்டுள்ள எதிர்ப்பு காரணாக குறித்த சடலங்கள் பல நாட்களாக பிணவறையில் வைக்க நேரிட்டுள்ளது.
சடலங்களை தகனம் செய்வதற்கு சவப்பெட்டி வழங்க முடியாதென கூறி தகன நடவடிக்கைக்கு எதிர்ப்பு வெளியிட்டு குடும்பத்தினர் வெளியேறியுள்ளதாக கொழும்பு சட்ட வைத்திய அதிகாரி அலுவலகம் மற்றும் சுகாதார பரிசோதகர்கள் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளனர்.
இந்த சடலங்களில் கொம்பனித்தெருவை சேர்ந்த இருவரது சடலங்களும், மருதானையை சேர்ந்த ஒருவரின் சடலமும், மாளிகாவத்தையை சேர்ந்த ஒருவரின் சடலமும்,கோட்டையை சேர்ந்த ஒருவரின் சடலமும் உள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நபர்கள் வீட்டில் இருந்து கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கும் போது உயிரிழந்தவர்களாகும். பிரேத பரிசோதனையின் பின் சடலத்தை ஏற்க குடும்பத்தினர் மறுப்பு தெரிவித்துள்ளார்கள் என குறிப்பிடப்படுகின்றது.
தமிழ் வின் செய்திகள்.