Ads Area

எலும்புகளை வலுவாக்குவதற்கு நீங்கள் சாப்பிடவேண்டிய உணவுகளின் பட்டியல்.

வைட்டமின் டி மற்றும் கால்சியம் உடலுக்கு தேவையான இரண்டு முக்கியமான ஊட்டச்சத்து மற்றும் தாதுக்கள் ஆகும். இந்த இரண்டு கூறுகளும் எலும்புகளை உருவாக்குவதற்கும், அவற்றை ஆரோக்கியமாக வைத்திருப்பதற்கும், நீண்ட காலத்திற்கு அவற்றை வலுப்படுத்துவதற்கும் முக்கியமானவையாக உள்ளன. வைட்டமின் டி-இன் பெரும்பகுதி சூரிய ஒளியில் இருந்து பெறப்பட்டாலும், கால்சியம் முக்கியமாக நாம் உண்ணும் உணவை சார்ந்துள்ளது.

எனவே, எலும்பு நோய்கள் மற்றும் ஆஸ்டியோபோரோசிஸ் போன்ற நிலைமைகளைத் தவிர்ப்பதற்காக, வைட்டமின் டி மற்றும் கால்சியம் நிறைந்த உணவுகளை நாம் சாப்பிடுவது மிக அவசியம். அந்த வகையில் இவை இரண்டும் நிறைந்துள்ள ஆரோக்கியமான உணவு வகைகளை குறித்து காண்போம்.

கொழுப்பு நிறைந்த மீன் : 

சால்மன், டிரவுட், டுனா மற்றும் மத்தி போன்ற கொழுப்பு மீன்கள் வைட்டமின் டி மற்றும் கால்சியத்தின் நல்ல மூலமாகும். ஆரோக்கியமாகவும், சத்தானதாகவும் இருப்பதை தவிர, இது உங்கள் எலும்பை உருவாக்கி அதற்கேற்ப பலப்படுத்துகிறது.

பால் : 

பால் மற்றும் பிற பால் பொருட்களான நெய், சீஸ் மற்றும் பனீர், எலும்புகளை அதிக அளவில் பலப்படுத்தும் திறன் கொண்டது. குறிப்பாக பால் குடிப்பதால், உடலின் எலும்பு அடர்த்தியை அதிகரிக்க பெரிதும் உதவுகிறது. தினமும் ஒரு டம்ளர் பால் குடிப்பதால் உடலுக்கு தேவையான வைட்டமின் டி சத்தில் 20 சதவீதம் வரை பெற முடியும். பாலில் கால்சியம், பாஸ்பரஸ் மற்றும் ரைபோஃப்ளேவின் உள்ளது.

பச்சை நிற காய்கறிகள் : 

பச்சை நிற காய்கறிகளே ஊட்டச்சத்துக்கான சிறந்த ஆதாரமாகும். இது நிரூபிக்கப்பட்ட உண்மை. ப்ரோக்கோலி மற்றும் காலே போன்ற காய்கறிகள் கால்சியத்தின் சிறந்த மூலங்களாக இருக்கின்றன. கீரைகளில் வெந்தயக் கீரை, வெங்காயத்தாள், முருங்கை, கொத்தமல்லி, முள்ளங்கிக்கீரை, பாலக்கீரை ஆகியவற்றில் கால்சியம் உள்ளது. கீரை இந்த வகைக்கு பொருந்துகிறது என்றாலும், அதில் ஆக்சாலிக் அமிலம் உள்ளது. இது மனித உடலில் அதன் கால்சியத்தை உறிஞ்ச முடியாமல் செய்கிறது.

சோயா பால் : 

சோயா பால், டோஃபு அல்லது பிற சோயா சார்ந்த உணவுகள் எலும்புகளுக்கு மிகவும் வளமானவை. இதில் கால்சியம் அதிகளவில் நிறைந்துள்ளது. எனவே, இந்த உணவுப் பொருள் ஆரோக்கியமான எலும்புகளை உருவாக்குகிறது.

முட்டை கரு : 

முட்டையின் வெள்ளை கரு புரதத்திற்கு ஒரு நல்ல மூலமாகும். இருப்பினும், உங்கள் உடலில் கால்சியம் மற்றும் வைட்டமின் டி அளவை அதிகரிப்பதற்கான வழிகளை நீங்கள் தேடுகிறீர்கள் என்றால், முட்டையின் மஞ்சள் கருவை உண்ண வேண்டும்.

காலிஃபிளவர் : 

ஒரு கப் நறுக்கப்பட்ட காலிஃபிளவரில் 50 மில்லிகிராம் வைட்டமின் சி நிறைந்துள்ளது. மேலும், காலிஃபிளவர் ஃபைபர், கால்சியம், பொட்டாசியம், மற்றும் வைட்டமின் K ஆகிய சத்துக்களை கொண்டுள்ளது.

காளான் : 

காளானில் வைட்டமின் டி அதிகம் உள்ளது. சூரிய ஒளியிலேயே வளரும் இந்த மஷ்ரூமில் வைட்டமின் பி1 பி2 பி5 சத்துகள், காப்பர் போன்றவை நிறைந்துள்ளன. சூரிய ஒளியினால் திறந்த வெளியில் வளர்க்கப்பட்டு விற்பனை செய்யப்படும் மஷ்ரூம்களில் மட்டுமே வைட்டமின் டி நிறைந்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe