Ads Area

கல்முனைப் பிராந்தியத்தில் மேலும் நால்வருக்கு தொற்றியது கொரோனா.

(காரைதீவு சகா)

கல்முனைப் பிராந்தியத்தில் நேற்று  மேலும் நான்கு நபர்களுக்கு  கொரோனாத் தொற்றாளர்கள்  இனங்காணப்பட்டுள்ளனர். மருதமுனை இறக்காமம் அக்கரைப்பற்று ஆகிய இடங்களிலேயே இவ்வாறு இனங்காணப்பட்டனர்.

அத்துடன் இப்பிராந்தியத்தின் தொற்றாளர்களின் எண்ணிக்கை 13 ஆக அதிகரித்துள்ளது என கல்முனைப்பிராநதிய சுகாதாரசேவைபபணிப்பாளர் டாக்ர் குண .சுகுணன் தெரிவித்தார்.

இறக்காமம் பிரதேசத்தில் கண்டுபிடிககப்பட்ட அந்த நோயாளி பாலமுனை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

கடந்த 27 ஆம் திகதி கொழும்பு புறக்கோட்டை பகுதியில் கடை ஒன்றில் பணியாற்றிய 45 வயது நபர் ஒருவர் அக்கரைப்பற்று வீதியில் உள்ள இறக்காமம் 1 எனும் இடத்தில் தனது வீட்டிற்கு திரும்பியிருந்தார். அவருக்கு எடுக்கப்பட்ட PCR மாதிரி பொசிட்டிவ்வாக நேற்று இரவு கிடைத்ததை தொடர்ந்து அவருடைய குடும்ப அங்கத்தவர்களான மனைவி மேலும் நான்கு பிள்ளைகள் உட்பட 5 பேருக்கு பிசிஆர் மாதிரிகள்  எடுக்கப்படுகின்றது.

அத்துடன் கொழும்பிலிருந்து அவருடன் ஒரே பஸ்சில் பயணித்த இன்னொரு நபர் உட்பட அவரின் குடும்பத்தார் இருவருக்கும் சேர்த்து மொத்தமாக இறக்காமம் கிராமப் பகுதியில்  எட்டு மாதிரிகள் எடுக்கப்படுகின்றன.

இந்த மினுவாங்கொடை பேலியகொடை தொற்று சம்பவங்களை தொடர்ந்து கல்முனை சுகாதார சேவைகள் பணிமனையின் கீழான பிரதேசங்களில் இதுவரை மொத்தமாக 13 நோயாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு இருக்கிறார்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe