Ads Area

இலங்கையின் கிழக்கே வாழும் வேடுவர்கள் பற்றிய ஆவணப்படம் By. காமிலா பேகம் (Video)

 

J.f.காமிலா பேகம் -

இலங்கையின் கிழக்கே வாழும் வேடுவர்களின் உடைகளில் மாற்றங்கள் ஏற்பட்டுள்ளன பார்வைக்கு இவ்வாறு இருப்பினும்,  பாரம்பரிய கலாச்சாரங்களை இன்னும் தமது வாழ்க்கையில் பல வகையிலும் பின்பற்றியே வாழ்கின்றனர். வேடுவ மொழியை தற்போது பேசவில்லை ஆயினும் , பூஜை வழிபாடுகளில் வேடுவமொழியிலேயே பாடல்களை பாடி, மந்திரங்களை ஓதி பூஜிக்கின்றனர். காட்டு விலங்குகளின் இறைச்சி, மீன் போன்றவற்றை நெருப்பில்  காயவைத்து தேனில் ஊறவைத்து சாப்பிடுவதை இன்னும் பரம்பரை பரம்பரையாக விரும்பிசெய்கின்றனர்.

இவ்வேடுவர்களது பாரம்பரிய பண்பாடுகள் இன்னும் பழமை வாய்ந்ததாகவே காணக்கூடியதாக இருக்கின்றது. இதன் காரணமாக தாம் இன்னும் "வேடுவ இனத்தவர்" என்று கௌரவமாக மதிக்கப்படல் வேண்டும் என்றும் எதிர்பார்க்கின்றனர். எதிர்காலத்தில் இலங்கையில் "வேடுவர்" என்ற ஒரு இனம்  இருந்ததாகவே சொல்லக்கூடிய சான்றுகள் இல்லாது போகலாம் என்றும் அச்சம் தெரிவிக்கின்றனர்.இதற்கு அரசினது அசமந்தமான போக்குகளும் ஒரு காரணமாக அமையலாம் .இதனால் 

அவர்களது அடிப்படை உரிமை பாதிக்கப்பட்டுள்ளதாக கூறுகின்றனர். பலமுறை உரியவர்களிடம் முறையிட்டும் தீர்வு என்பது இதுவரை எட்டியதாக இல்லை.

ஒரு வகையில் தாம் விளிம்பு நிலைக்கு தள்ளப்பட்ட சமூகமாகவே இருப்பது, கவலைக்குரிய விடயமாகவே உணர்கின்றனர்.


Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe