சம்மாந்துறை நம்பிக்கையாளர் சபையின் கலாச்சார மற்றும் நல்லிணக்க குழுவின் மஹல்லா ரீதியான சந்திப்பின் ஆரம்ப நிகழ்வு நேற்று 06.12.2020 மக்ரிப் தொழுகையைத் தொடர்ந்து மஸ்ஜிதுல் மதீனாவில் கலாச்சார மற்றும் நல்லிணக்க குழுவின் தலைவர் எம்.எம் நௌஷாட் அவர்களின் தலைமையில் கௌரவ நம்பிக்கையாளர் சபையின் பங்களிப்புடனும், மஹல்லா நிருவாகிகள் மற்றும் ஜமாத்தார்களின் பங்களிப்புடனும் அல்ஹம்துலில்லாஹ் வெற்றிகரமாக நடந்து முடிந்தது.
எமது கலாச்சார மற்றும் நல்லிணக்க குழுவின் மஹல்லாவாரியான சந்திப்பின் நோக்கம், சம்மாந்துறை நகரை ஒரு அருள்பாலிக்கப்பட்ட சமூகத்தை உருவாக்குவதன் மூலம் ஒரு அருள்பாலிக்கப்பட்ட நகரை உருவாக்குதல்.
அந்த அடிப்படையில் ஒவ்வொரு மஹல்லாக்களும் அடிப்படையில் இருந்து நிரந்தரத் தன்மை கொண்ட செயற்பாடுகள் மூலம் கட்டியெழுப்பப்படும் வகையிலும், மாஹல்லாவில் கலாச்சார மேம்பாட்டிற்கு சவாலாக அமையும் காரணிகள் பற்றியும் ஆராயப்பட்டு அதற்கான தீர்வுகளை முன்னெடுப்பதற்கான ஆயத்தங்களும் செய்யப்பட்டது.
எம்.எச்.முஹம்மது ஹாரிஸ்
செயலாளர்
கலாச்சார மற்றும் நல்லிணக்கக் குழு
நம்பிக்கையாளர் சபை
சம்மாந்துறை.