COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்வதற்கான உரிமை முஸ்லிம் மக்களுக்கு கிடைக்க வேண்டும் என முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன ‘த ஹிந்து’ பத்திரிகைக்கு தெரிவித்துள்ளார்.
COVID தொற்றினால் உயிரிழப்பவர்களின் உடல்களை அடக்கம் செய்ய முடியும் என உலக சுகாதார ஸ்தாபனம் பரிந்துரை செய்துள்ள நிலையில், முன்னாள் சுகாதார அமைச்சர் என்ற வகையில் தாமும் அந்த நிலைப்பாட்டிற்கு இணங்குவதாக அவர் கூறியுள்ளார்.