சவூதி அரேபியாவின் குடிமக்கள் மற்றும் குடியிருப்பாளர்கள் சவூதி அரேபியாவிற்கு பயணிப்பது மற்றும் சவுதியில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வதற்கு விதிக்கப்பட்டிருக்கும் கட்டுப்பாடுகளானது நீக்குவது விரைவில் அமைச்சகத்தால் அறிவிக்கப்படும் என சவூதியின் அதிகாரப்பூர்வ செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த செப்டம்பர் 13 ம் தேதி அன்று, இந்த பயணத் தடையானது அடுத்த வருடம் ஜனவரி 1 ஆம் தேதி வரை நீட்டிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக அமைச்சகம் அறிவித்திருந்தது. மேலும், பயணக்கட்டுப்பாடு நீக்குவது நடைமுறைக்கு வரும் 30 நாட்களுக்கு முன்னர் அது குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் எனவும் அமைச்சகம் அறிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும், இருவழிப் பயணங்களுக்கான கட்டுப்பாடுகளை நீக்குவதற்கும், துறைமுகங்களை திறக்க அனுமதிப்பதற்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும் என்பதை அமைச்சகம் உறுதிப்படுத்த விரும்புகிறது என்றும் தகவல்கள் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் நீக்கப்பட்டு விமானப் போக்குவரத்து சேவையானது மீண்டும் துவங்கப்பட இருந்தால் பயணிகள் மற்றும் விமான நிறுவனங்களுக்கு கொரோனா வைரஸ் நெறிமுறைகளை செயல்படுத்த சுகாதார அமைச்சகம் கோரிக்கை விடுக்கக்கூடும் என்றும் அமைச்சகம் சுட்டிக்காட்டியிருந்தது.
சவூதி அரேபிய ஏர்லைன்ஸ் (சவூதியா) செப்டம்பர் 15 ஆம் தேதி சர்வதேச விமானங்களின் ஓரளவு செயல்பாட்டை மீண்டும் தொடங்கியதும், தற்பொழுது 33 நாடுகளுக்கு சவூதியா ஏர்லைன்ஸ் விமான நிறுவனம் விமான சேவைகளை இயக்கி வருவதும் குறிப்பிடத்தக்கது.
செய்திக்கு நன்றி - khaleejtamil