தகவல் - சம்மாந்துறை அன்சார்.
சவுதி அரேபிய சுகாதார அமைச்சு அந் நாட்டு மக்கள் அனைவரையும் நடைப்பயிற்சி செய்து உடல் ஆரோக்கியத்தை பேணிப் கொள்ளுமாறு வேண்டுகோள் விடுத்துள்ளது.
வாகனத்தில் செல்வோர் கிடைக்கும் நேரங்களில் வாகனத்தை ஓரிடத்தில் நிறுத்தி விட்டு சிறுது நேரம் நடைப் பயிற்சி மேற் கொள்ளலாம், வேண்டுமானால் இசை கேட்டுக் கொண்டும் நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம் அது அதிக துாரம் நடைப் பயிற்சி மேற்கொள்ள உதவலாம் என்றும் கூறியுள்ளது.
நடைப் பயிற்சி செய்ய விசேட ஆடைகள் தேவையில்லை சாதாரணமாக வீட்டுப் படிகளில் கூட ஏறி இறங்கி நடைப் பயிற்சி மேற்கொள்ளலாம் அதே போல் வீட்டுக்கு அருகாமையில் உள்ள கடைகளுக்கு செல்வதற்கோ, அல்லது பள்ளிவாசலுக்கு தொழுகைக்காக செல்வதற்கோ வாகனங்களை பயண்படுத்தாமல் நடந்து செல்லலாம் எனவும் பொதுமக்களை கேட்டுக் கொண்டுள்ளது.