Ads Area

வெளிநாடு செல்ல தாய் அனுமதிக்காததால் 4 வயது மகனை கொலை செய்து, தானும் தற்கொலை செய்து கொண்ட யுவதி.

(செ.தேன்மொழி)

மத்திய கிழக்கு நாட்டுக்கு தொழிலுக்குச் செல்வதற்கு தாய் அனுமதிக்காததால் பெண்ணொருவர் அவரது மகனை கொலை செய்து தானும் தற்கொலை செய்து கொண்டுள்ளார். கந்தர பிரதேசத்தில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ்மா அதிபர் அஜித் றோஹன தெரிவித்தார்.

இது குறித்து அவர் மேலும் கூறுகையில், 

கந்தர பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பங்கலாவத்த பகுதியில் அமைந்துள்ள வீடொன்றில் நேற்று ஞாயிற்றுக்கிழமை பெண்ணொருவரும் அவரது மகனும் சடலமாக மீட்கப்பட்டனர். பங்கலாவத்த பகுதியைச் சேர்ந்த 24 வயதுடைய பெண்ணொருவரும் 4 வயதுடைய அவரது மகனுமே இவ்வாறு சடலங்களாக மீட்கப்பட்டுள்ளனர்.

உயிரிழந்த பெண்ணின் கணவன் மீன்பிடி தொழில் ஈடுபடுபவராவார். அவர் சம்பவ தினத்தன்று தொழிலுக்காக கடலுக்குச் சென்றுள்ளார். குறித்த பெண் கடிதமொன்றை எழுதி வைத்துவிட்டு தனது மகனின் கழுத்தை சேலையால் இறுக்கி கொலை செய்துள்ளதோடு , அவரும் தூக்கிட்டு தற்கொலை செய்துக் கொண்டுள்ளார்.

பெற்ற கடன்களை மீள செலுத்துவதற்காக அந்த பெண் மத்திய கிழக்கு நாடொன்றில் சென்று தொழில் புரிவதற்காக தனது தாயிடம் அனுமதிக் கேட்டுள்ளார். அதற்கு அவரது தாயார் மறுப்பு தெரிவித்தமையினாலேயே அவர் இவ்வாறு தற்கொலை செய்துக்கொண்டுள்ளதாக பொலிஸாரின் விசாரணைகளின் போது தெரியவந்துள்ளது. குறித்தச் சம்பவம் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

செய்தி - வீரகேசரி.



                 

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe