Ads Area

வட - கிழக்கு தழுவிய ஹர்த்தால் அழைப்புக்கு பூரண ஆதரவு வழங்குமாறு ஆஸாத்சாலி அறிக்கை!

யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் நிறுவப்பட்டிருந்த நினைவுத் தூபி இடிக்கப்பட்டதன் பின்னணியில் யாழ் மண்ணில் தொடர்ச்சியான அதிருப்தி நிலவி வருகிறது.

இந்நிலையில், தமிழ் அரசியல் தரப்புகள் மற்றும் பல்கலைக்கழக மாணவர்கள் கூட்டாக இணைந்து நாளை திங்கட்கிழமை 11ம் திகதி வட - கிழக்கில் பூரண ஹர்த்தாலுக்கு அழைப்பு விடுத்துள்ளனர்.

சிறுபான்மை சமூகங்கள் தொடர்ச்சியாக ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்பட்டு வரும் தொடர்ச்சியில் இச்சம்பவம் இடம்பெற்றுள்ள அதேவேளை, வட  கிழக்கு வாழ் முஸ்லிம் சமூகமும் பூரண ஆதரவை இந்த ஹர்த்தால் அனுஷ்டிப்புக்கு வழங்கவுள்ளதாக அவர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.                     

முன்னாள் மேல் மாகாண ஆளுநரும், தேசிய ஐக்கிய முன்னனியின் தலைவருமான அசாத்சாலி தனது அறிக்கையில், தமிழ் பேசும் மக்களுக்கு எதிராக யாழ். பல்கலைக்கழகத்தில் நிகழ்ந்த அடாவடிதனத்திற்கும் முஸ்லிம்களின் மீதான கட்டாய ஜனாஸா எரிப்புக்கும் எதிராக அமைதியான முறையில்  விஷேடமாக கிழக்கு வாழ் முஸ்லிம்கள் அனைவரும்  ஒன்றுபட்டு நமது ஆதரவை இந்த ஹர்த்தாலின் மூலமாக வெளிப்படுத்துவோம் எனவும் தெரிவித்துள்ளாா்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe