நிந்தவூரைச் சேர்ந்த மக்கள் வங்கியின் அம்பாறை பிராந்தியத்திற்கு பொறுப்பான வியாபார அபிவிருத்தி உத்தியோகத்தராக கடமையாற்றி வந்த தம்பிராசா முஹம்மட் மஜீத் அவர்கள் மக்கள் வங்கியின் சவூதி அரேபியா நாட்டிற்கான வெளிநாட்டு பிரதிநிதியாக தெரிவு செய்யப்பட்டு எதிர்வரும் 01.02.2021 திகதி பயணமாகின்றார்.
இவர் MBA (UoC-Malaysia), BBA, GDBM(LMQ-UK), HNDBM(LMQ-UK), Diploma in Applied Banking and Finance( IBSL), Diploma in BM(IIBM-India), Diploma in HRM(AIIMS-India) மற்றும் இலங்கை வங்கியாளர் நிறுவனத்தின் அங்கத்தவரும்(Associate Member) ஆவார்.
கடந்த 16 வருடங்களாக மக்கள் வங்கியில் கடமையாற்றும் இவர் ஏற்கனவே United Arab Emirates நாட்டுக்கான மக்கள் வங்கியின் வெளிநாட்டு பிரதிநிதியாக கடமையாற்றி Abu Dhabi, Sharjah, Dubai பிராந்தியங்களுக்கு பொறுப்பாக 06 வருடங்கள் கடமையாற்றினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் மேலும் மக்கள் வங்கியின் வியாபார ஊக்குவிப்பு செயட்பாட்டில் சிறப்பாக செயட்பட்டமைக்காக முழு இலங்கைக்குமான Best Regional Competent Business Promotion Officers Award-2017 யைப் பெற்று சிங்கப்பூர் நாட்டில் சர்வதேச கல்விகருத்தரங்கில் பங்குபெறுவதட்கான புலமைப் பரிசிலையயும் வென்றுள்ளார்.
மேலும் எமது பிரதேச மாணவர்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் முகமாக பல்வேறு கல்வி சார்ந்த நிகழ்வுகளை முன்னெடுத்து நடாத்தியுள்ளதுடன், பிரதேச கல்வித் தகைமைகளுடன் மிகவும் நெருங்கி செயற்பட்டுள்ளார்.
செய்திக்கு நன்றி - நிந்தவூர் டுடே.