Ads Area

சம்மாந்துறை வலயக்கல்வி பாடசாலைகளில் கடமை புரிய பட்டதாரிகள் பயிலுனர், ஆசிரியர்களாக உத்தியோகபூர்வமாக நியமனம்.

 பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)

ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷவின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கைப் பிரகடத்திற்கமைவாக நியமிக்கப்பட்ட பட்டதாரி பயிலுனர்களை பாடசாலைகளில் பயிற்சி ஆசிரியர்களாக இணைத்துக் கொள்வதற்கான நியமனக் கடிதங்கள் நேற்று (20) நாவிதன்வெளி பிரதேச செயலக கலாசார மத்திய நிலையத்தில் வைத்து வழங்கி வைக்கப்பட்டன.

இதற்கமைய நாவிதன்வெளி பிரதேச செயலகத்தில் பட்டதாரி பயிலுனர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டவர்களில் 62 பட்டதாரி பயிலுனர்கள் சம்மாந்துறை வலயத்தின் கீழுள்ள நாவிதன்வெளி கோட்டப்  பாடசாலைகளில் இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

சம்மாந்துறை வலயப் பிரதிக் கல்விப்பணிப்பாளரும், நாவிதன்வெளி கோட்ட பதில் பணிப்பாளருமான என்.நிதர்சினி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில், நாவிதன்வெளி பிரதேச செயலாளர் எஸ்.ரங்கநாதன், சம்மாந்துறை வலயக் கல்விப்பணிப்பாளர் எம்.எஸ்.சஹதுல் நஜீம், பிரதிக் கல்விப்பணிப்பாளர்களான எஸ்.எம்.ஹைதர் அலி, எஸ்.எம்.எம்.அமீர், பிரதேச செயலக நிருவாக உத்தியோகத்தர் கே.யோகேஸ்வரன் அதிபர்களான எஸ்.எம்.யூசுப், கே.பாலசிங்கன் உட்பட மேலும் பலர் கலந்து கொண்டனர்.

அம்பாறை மாவட்டத்தில் சம்மாந்துறை வலயக்கல்வி பாடசாலைகளில் நிலவிய ஆசிரியர் பற்றாக்குறைகளை நிவர்த்தி செய்யும் வண்ணம் இப்பட்டதாரி பயிலுனர்கள் ஆசிரியர் பயிலுனர்களாக இணைக்கப்பட்டமை குறிப்பிடதக்கது.









Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe