10 குற்றங்களுக்காக “ஹாரூன் யஹ்யா” எனும் பெயரில் பிரபல்யமான துருக்கிய மத போதகர் அத்னான் ஒகடருக்கு 1000 வருட சிறைத்தண்டனையை அந்நாட்டு நீதிமன்றம் வழங்கியுள்ளது.
இது தொடர்பில் ஸ்தான்பூல் நீதிமன்றம் 236 பிரதிவாதிகளை விசாரித்ததுடன், ஒழுங்கமைக்கப்பட்ட குற்றச்செயல்களுக்காக ஒக்டர் தலைமையிலான 78 பேர் அடங்கிய குழுவினரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டது.
ஒரு குற்றவியல் அமைப்பை நிறுவ வழிநடாத்தியமை, அரசியல் அல்லது இராணுவ உளவு, உறுப்பினராக இல்லாவிடினும் பெதுல்லாஹ் பயங்கரவாத அமைப்புக்கு உதவியமை, சிறுவர் பாலியல் துஷ்பிரயோகம், பாலியல் துஷ்பிரயோகம், ஒருவரின் சுதந்திரத்தை பறித்தமை, சித்திரவதை செய்தமை, கல்வி உரிமைக்கு இடையூறு, தனிப்பட்ட தரவுகளை பதிவு செய்தமை மற்றும் அச்சுறுத்தல் விடுத்தமை ஆகிய குற்றச்சாட்டுக்களுக்காக நீதிமன்றம் ஒக்டருக்கு மொத்தம் 1000 வருடங்கள் மற்றும் மூன்று மாத கால சிறைத்தண்டனையை விதித்துள்ளது.
ஒரு தொலைக்காட்சி அலைவரிசையினை வைத்திருந்த 64 வயதான ஒக்டர் பாலியல் துஷ்பிரயோகம், சிறுவர்களை கடத்தியமை போன்ற குற்றச்சாட்டுக்களை தொடர்ந்து கடந்த 2018 இல் 200 ஆதரவாளர்களுடன் கைது செய்யப்பட்டார்.
ஒக்டரின் தொலைக்காட்சி அலைவரிசையில் அவரது நிகழ்ச்சிகளில், ஒக்டரின் “பூனைகள்” என்று குறிப்பிடப்படும் பெண்களால் சூழப்பட்டு நடாத்தப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
ஏனைய பிரதிவாதிகளுக்கும் நீண்ட தண்டனைகள் கிடைக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.