Ads Area

சவுதியில் ட்ரைவிங் லைசனை (Driving License) எடுத்துச் செல்லத் தவறினால் 2000 ரியால்கள் அபராதம்.

தகவல் - சம்மாந்துறை அன்சார்.

வாகனம் ஓட்டும் போது ஓட்டுனர் உரிமத்தை அதாவது ட்ரைவிங் லைசனை (Driving License) எடுத்துச் செல்லத் தவறினால் 2000 ரியால்கள் வரை அபராதம் விதிக்கப்படும் என சவுதி அரேபிய பொதுப் போக்குவரத்துத் துறை (Saudi Moroor) அறிவித்துள்ளது.

சவுதி அரேபிய குடிமகன் ஒருவர் தனது மகனுக்கு 1000 ரியால்கள் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது இது தொடர்பான விளக்கத்தினை தாருங்கள் என சவுதி அரேபிய பொதுப் போக்குவரத்துத் துறையினரிடம் முன்வைத்த கேள்விக்கு பதிலளிக்கையிலேயே போக்குவரத்துத் துறை (Saudi Moroor) மேற்கண்டவாறு தெரிவித்துள்ளது.

ஓட்டுனர் உரிமம் பெறுவதற்கு முன்னரே வாகனம் ஓட்டுதல், வாகன இலக்கத்தகடு (Number Plate) இல்லாது வண்டி ஓட்டுதல் மற்றும் தெளிவில்லாத வாகன இலக்கத் தகடு வைத்திருத்தல், வீதிப் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுத்தும் படி வாகனத்தின் தோற்றத்தினை மாற்றி வண்டி ஓட்டுதல் போன்றவற்றிக்கு 1000 தொடக்கம் 2000 ரியால் வரை அபராதம் விதிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆகவே...சவுதியில் உள்ள தமிழர்கள் நீங்கள் வாகனம் ஓட்டுபவர்களாக இருந்தால் உங்களது ஓட்டுனர் உரிமத்தினை மறந்து விடாமல் தவறாது கையோடு எடுத்துச் செல்லுங்கள், மீறினால் அபராதங்களுக்குல் அகப்பட்டுக் கொள்வீர்கள்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe