(சினாப் காசிம்)
அட்டாளைச்சேனை பிரதேச சபைத் தவிசாளர் என்பது மிகவும் பொறுப்பு வாய்ந்த பதவியாகும். நீங்கள் அரசியல் கட்சி சார்பாக இப் பதவிக்கு தெரிவு செய்யப்பட்டாலும் ஒட்டு மொத்த அட்டாளைச்சேனை பிரதேசத்தின் கெளரவ முதல்வர் நீங்கள் என்பதை மறந்து விட வேண்டாம்.
நமது பிரதேத்தில் நடமாடும் வியாபாரிகளின் தொல்லை தொடர்ந்தும் அதிகரித்து வருகின்றது. குறிப்பாக வாகனங்களில் ஒலி பெருக்கியை பயன்படுத்தியே தமது வியாபாரத்தை மேற் கொள்கின்றனர். இதனால் மக்கள் பெரும் அசோகரியங்களுக்கு ஆளாகி வருகின்றனர்.
ஒரு நாளைக்கு அளவுக்கதிகமான வாகனங்கள் நமது பிரதேசத்தில் உலா வருகின்றன. வேறு பிரதேசத்து வியாபாரிகளும் தான் விரும்பியவாறு ஒலி பெருக்கியை பயன்படுத்தி வருகின்றனர்.
அதான் ஒலிக்கும் போதும் தொழுகையில் ஈடுபடும் போதும் பாடல்களை ஒலிபரப்புகின்றனர். இரவு நேரங்களில் மாணவர்களின் கல்வி நடவடிக்கைக்கு பெரும் பாதிப்பையும் ஏற்படுத்தி வருகின்றது.
இப்படியான பிரச்சினைகள் மக்களுக்கு இருக்கின்ற நிலையில் ஏன் பிரதேச சபை நடவடிக்கை எடுக்கவில்லை என்பது எமது கேள்வியே.
எனவே பிரதேச சபை விரைந்து இதற்கான ஒழுங்கமைப்பை மேற்கொள்ள வேண்டும் என அன்பாய் வேண்டுகிறோம்.