Ads Area

வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான சமூதாயம் சார்பான உட்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

(றாசிக் நபாயிஸ், மருதமுனை நிருபர்)

அம்பாறை மாவட்டத்தில் 12 பிரதேச செயலகப் பிரிவுகளில் நவஜீவன அரச சார்பற்ற நிறுவனத்தின்  ஊடாக செயற்படுத்தப்படும் வலுவிழப்புடன் கூடிய நபர்களின் வாழ்க்கைத்தரத்தை  மேம்படுத்தும் செயற்றிட்டத்தின் கீழ்  வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான சமூதாயம் சார்பான உட்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான விழிப்புணர்வு நிகழ்வு.

இன்று (20201/02/16) நவஜீவன அம்பாறை மாவட்ட இணைப்பாளர், ரி.டி.பத்ம கைலநாதன் தலைமையில் கல்முனை கிறிஸ்த இல்ல கூட்ட மண்டபத்தில் இடம் பெற்றது.

இச்செயலமர்வு நவஜீவன நிறுவனத்தின் பி.எம்.இசெட் செயற்றிட்டத்துக்கான தேசிய இணைப்பாளர் முதிர்ந்த குமாரின் நெறிப்படுத்தலில் வலுவிழப்புடன் கூடிய நபர்களுக்கான

சமூதாயம் சார்பான உட்படுத்தப்பட்ட அபிவிருத்தி செயற்றிட்டம் தொடர்பான இவ்விழிப்புணர்வு இந்நிகழ்வை நவஜீவன நிறுவனத்தின் கல்வி மேம்பாடு அதிகாரி பியூமி இரோசா வளவாளராக செயற்பட்டார்.

இச்செயலமர்வில் சி.பி.ஐ.டி.செயற்றிட்ட இணைப்பாளர் டபிளியூ.ஏ.கிருஷ்சாந், வெளிக்கள உத்தியோகத்தர் எஸ்.சவுந்தராஜன், பொலிஸ் உத்தியோகத்தர், சமூக அபிவிருத்தி உத்தியோகத்தர், விதாதா தொழில்நுட்ப உத்தியோகத்தர், திறன் அபிவிருத்தி உத்தியோகத்தர், வலுவிழப்புடன் கூடிய அமைப்புக்களின் தலைவர்கள், கல்விச் சேவை உத்தியோகத்தர்கள், சுகாதார சேவை உத்தியோகத்தர்கள் மற்றும் அரச சார்பற்ற நிறுவனங்களின் மாவட்ட இணைப்பாளர் போன்றோர்கள் பலர் கலந்து கொண்டனர்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe