Ads Area

சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இடம் பெற்ற சுதந்திர தின நிகழ்வு.

ஐ.எல்.எம் நாஸிம்

தேசிய கொடியேற்றி, தேசிய கீதங்கள் இசைக்கப்பட்டு 73வது சுதந்திர தினம் பல்வேறு பகுதிகளில்  கொண்டாடப்பட்டு வருகின்றன.

இதனடிப்படையில், சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம்.ஹனீபா  தலைமையில் இன்று (4) காலை பிரதேச செயலக வளாகத்தில் நிகழ்வுகள் நடைபெற்றன.

இதன் போது, பிரதேச செயலாளரினால் தேசியக் கொடியேற்றப்பட்டு, தேசிய கீதம் பாடப்பட்டு மரியாதை செய்யும் நிகழ்வு இடம்பெற்றதுடன், பிரதேச செயலக வளாகத்தில் மரக்கன்றுகள் நாட்டியும் வைக்கப்பட்டன.

இந்நிகழ்வில், உதவிப்பிரதேச செயலாளர் எம்.எம்.ஆசீக், கணக்காளர் ஐ.எம்.பாரிஸ், சமுர்த்தி முகாமையாளர் யூ.எல்.எம்.சலீம், நிருவாக உத்தியோகத்தர் எம்.ஏ.பாரூக், உதவித்திட்டமிடல் பணிப்பாளர் ஏ.எல்.ஏ.மஜீட், ஏ.எல்.எம்.அஸ்லம் உள்ளிட்ட அலுவலக உத்தியோகத்தர்கள் எனப்பலர் கலந்து கொண்டனர்.






Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe