கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக இலங்கையின் முதல் மருத்துவர் மரணம் இன்று (02) கராபிட்டி மருத்துவமனையில் இருந்து பதிவாகியுள்ளது.
உயிரிழந்தவர் ராகமவின் Hinkanda வில் வசிக்கும் Dr கயன் தந்தநாராயண (32) என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
ராகம மருத்துவமனையில் பணிபுரியும் போது கோவிட் -19 நோய்த்தொற்று காரணமாக அவர் கொழும்பில் உள்ள ஐ.டி.எச். யில் அனுமதிக்கப்பட்டார்.
பின்னர் அவர் 27 ஆம் தேதி கராபிட்டி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். பின்னர் கோவிட் நிமோனியா காரணமாக சிகிச்சைக்காக தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார்.
கோவிட் நோய்த்தொற்று காரணமாக இலங்கையில் இறந்த முதல் மருத்துவர் இவராகும் என்று கராபிட்டி மருத்துவமனையின் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.
இதற்கிடையில், இறந்த மருத்துவரின் குடும்ப உறுப்பினர்களும் தனிமைப்படுத்தப்பட்டள்ளதாக காலி மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது.
Source: Daily Mirror
தமிழில் Lankahealthtamil.com
பிற்குறிப்பு:
இதற்கிடையில் இதற்கு முன்னர் ஞான பண்டிதர் எனும் வைத்தியர் மரணித்த செய்தி பதிவானபோதும் அவர் தனியார் துறையில் வைத்தியராக அடையாளம் காணப்பட்டு ஓய்வு பெற்றிருந்த அதேவேளை மருத்துவ சபையில் பதிவு செய்யப்பட்ட வைத்தியர் இல்லை என்பதால் முதலாவதாக கருத்தில் கொள்ளப்படவில்லை.