ஐக்கிய அரபு எமிரேட்ஸில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒன்றினால் ஏமாற்றப்பட்டு வேலை இல்லாமலும், பாஸ்போட் இல்லாமையினால் புதிய வேலையினைத் தேடவோ அல்லது இந்தியா திரும்பவோ வழியில்லாதும் 8 இந்திய தொழிலாளிகள் மிகுந்த சிரமப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
துபாயில் உள்ள இந்திய துணைத் தூதரகம் அவர்களின் அவலநிலை குறித்து தெரிவித்த பின்னர் துபாயில் உள்ள சில சமூக சேவையாளர்கள் அவர்களுக்கு உதவிகளை செய்துள்ளனர்.
வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் ஒருவர் துபாயில் வேலை பெற்றுத் தருவதாக தங்களை ஐக்கிய அரபு எமிரேட்சுக்கு அழைத்து வந்ததாகவும் அதற்காக அவருக்கு 30 ஆயிரம் ரூபாய்கள் (1500 திர்ஹம்) வழங்கியதாகவும் தெரிவித்துள்ளனர்.
தற்போது தாங்கள் எந்தவித உணவும், வேலையும், கையில் பணமும் இன்றித் தவித்து வருவதாக அவர்கள் தெரிவித்துள்ளனர்.
துபாயில் உள்ள கிரண் என்ற சமூக சேவகர் ஒருவரே முதலில் அவர்களை வீதியில் கண்டு அவர்களின் நிலையினை அறிந்து அவர்கள் தொடர்பில் உடனடியாக இந்திய துணைத் துாதரகத்திற்கு அறிவித்திருந்தார் அதன் பிறகு இவர்களது விடையம் மற்றொரு சமூக சேவகரான ஹிதாயத் என்பருக்கு அறிவிக்கப்பட்டு அவர் இவர்களுக்கு வேண்டிய இருப்பிடம், உணவு போன்றவற்றை ஏற்பாடு செய்து கொடுத்துள்ளார்.
இவர்களை இந்தியாவிலிருந்து அழைத்து வந்தவர் அவர்களின் பாஸ்போட்களை வாங்கிக் கொண்டு அதனை தொழில் வழங்கும் நிறுவனத்திடம் வழங்காது ஏமாற்றி வந்துள்ளார், தற்போது பல நிறுவனங்களில் இவர்களுக்கு வேலை கிடைக்கும் வாய்ப்பு இருந்தும் அவர்களிடம் பாஸ்போட் இல்லாமையால் மேலும் சிரமப்பட்டு வருவதாக சமூக சேவகர் ஹிதாயத் தெரிவித்துள்ளார்.
தமிழில் - சம்மாந்துறை அன்சார்
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com

