Ads Area

சம்மாந்துறை சென்நெல் சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய அதிபராக ஏ. முஹம்மட் ரிஸ்வான் நியமனம்.

தகவல் - Pickthall Quadir

சம்மாந்துறை சென்நெல் சாஹிரா மகா வித்தியாலயத்தின் புதிய பதில் (Acting) அதிபராக ஏ. முஹம்மட் ரிஸ்வான் அவர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். சம்மாந்துறை சென்நெல் சாஹிரா மகா வித்தியாலயத்தில் அதிபராக செயற்பட்டு வந்த எம்.ஐ.மீரா முகைடீன் அவர்கள் அல்-மர்ஜான் தேசிய பாடசாலையின் அதிபராக நியமனம் பெற்றதையடுத்து சென்நெல் சாஹிராவின் பிரதி அதிபர் ஏ. முஹம்மட் ரிஸ்வான் பதில் (Acting) அதிபராக நியமிக்கப்பட்டுள்ளார்.

எம்.ஐ.மீரா முகைடீன் அவர்கள் தனது பொறுப்புக்களை இன்று 09.06.2021 புதிய அதிபர் ஏ. முஹம்மட் ரிஸ்வான் அவர்களிடம் ஒப்படைத்தார். 

இந்நிகழ்வில் சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். சஹத்துல் நஜீம், பிரதிக் கல்விப் பணிப்பாளர் எஸ்.எம்.எம். அமீர், கோட்டக் கல்வி பணிப்பாளர் எம்.ஏ. சபூர் தம்பி, பாடசாலை உதவி அதிபர்கள், பாடசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்கள் மற்றும் பாடசாலை முகாமைத்துவ அணி உறுப்பினர்கள்  ஆகியோர்களின் பங்குபற்றலுடன் இடம்பெற்றது. 




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe