Ads Area

தனது பிறந்தநாள் பரிசாக மக்களுக்கு நிவாரணம் வழங்கவென ஒரு மில்லியன் ரூபாவினை வழங்கிய மனோகரன் சுப்பிரமணியம்.

(வி.ரி.சகாதேவராஜா)

தொடரும் பயணத்தடை மற்றும் கொரோனா காரணமாக பாதிக்கப்பட்ட தாயக உறவுகளின் பசியைப் போக்க தனது பிறந்த நாள் பரிசாக 10 லட்சருபாவை வழங்கியுள்ளார் ஒரு  பரோபகாரி. அவர்தான் இலங்கை    யாழ்ப்பாணத்தைச்  சேர்ந்த கனடாவில் வாழ்ந்து வரும் மனோகரன் சுப்பிரமணியம் என்பார்.

குறிப்பாக அவர் வழங்கிய 1 மில்லியன் ரூபா (10 இலட்சம்) நிதியை அம்பாறை மாவட்டத்தைச் சேர்ந்த 500 குடும்பங்களுக்கு தலா 2000 ரூபா வீதம் 500 உலருணவு நிவாரணப் பொதிகளை வழங்கி உதவுமாறு மாவட்டத்தின் பிரபல சமுக செயற்பாட்டாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறிலிடம் கேட்டுக்கொண்டிருந்தார்.

அதற்கிணங்க அம்பாறை மாவட்டத்தில் பின்தங்கிய திருக்கோவில் பெரு நிலப்பரப்பில் சமகால கொவிட் தாக்கத்தினாலும் பயணத்தடையினாலும் பாதிக்கப்பட்டு வாழ்வாதாரத்தையிழந்த ஒரு தொகுதி மக்களுக்கு உலருணவு நிவாரணம் நேற்று  வழங்கப்பட்டது.

திருக்கோவில் பிரதேச செயலாளர் த.கஜேந்திரன் விடுத்த வேண்டு கோளையேற்று பிரபல சமுக செயற்பாட்டாளர் கி.ஜெயசிறில் இந்நிவாரணத்தை வழங்கிவைத்தார்.

திருக்கோவில் பிரதேசத்திலுள்ள மண்டானை காயத்திரி கிராமம் குடிநிலம் வினாயகபுரம் பாலக்குடா திருக்கோவில் ஆகிய   கிராம மக்களுக்கென உலருணவு நிவாரணப்பொதிகளை சமுகசேவையாளரும் காரைதீவு பிரதேசசபைத் தவிசாளருமான கிருஸ்ணபிள்ளை ஜெயசிறில் 200 உலருணவுப் பொதிகளை நேற்று   வழங்கிவைத்தார்.

நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் க.சதீஸ் சமுக செயற்பாட்டாளர்  வி.ரி.சகாதேவராஜா உதவி திட்டமிடல் பணிப்பாளர் செல்வி எம்.அனோஜா உள்ளிட்ட பிரமுகர்களும் கலந்துகொண்டனர்.

பயனாளிகள் கருத்துரைக்கையில் கனடாவில் வதியும் மனோகரன் சுப்பிரமணியத்திற்கு நீண்ட ஆயுள் கிடைக்கவேண்டுமென பிறந்தநாள்  வாழ்த்தும் நன்றியும் தெரிவிக்கின்ற அதேவேளை அதனை இங்கு பெற்றுத்தந்த தவிசாளர் ஜெயசிறில் ஜயாவுக்கும் நன்றிகள் என்று  கூறினர்.

எமது கிராம மக்களுக்காக முதன்முதலில் சமுகசெயற்பாட்டாளர்களான தவிசாளர் கி.ஜெயசிறில் உதவிக் கல்விப்பணிப்பாளர் வி.ரி.சகாதேவராஜா ஆகியோர் உயிரைத் துச்சமென மதித்து காரைதீவிலிருந்து இங்குவந்து இவ்வுதவியை எமக்கு வழங்கிவைத்தமைக்காக எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம் என பிரதேச செயலாளர் கஜேந்திரன்  அங்கு நன்றிகூறினார்.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe