Ads Area

இலங்கைக் கடலில் பழைய பஸ்களை இறக்கும் செயலைக் கண்டித்து தமிழக இராமேஸ்வர மீனவர்கள் கண்டனம்.

அமைச்சர் டக்ளஸ் தேவாநந்தாவினால் வடக்கு கடற் பகுதியில் மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கைக்கு எதிராக இந்தியாவில் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக தெரிவிவக்கப்பட்டுள்ளது. இலங்கையின் வடக்கு கடற் பகுதியில் கைவிடப்பட்ட நிலையில் இருக்கும் இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகளை தடுத்து நிறுத்தக் கோரியே நாளைய தினம் கவனயீர்ப்பு போராட்டம் ஒன்றை முன்னெடுக்கவுள்ளதாக தமிழக இராமேஸ்வர மீனவர்கள் அறிவித்துள்ளனர். மீன்வளத்தை அதிகரிக்கும் நோக்கில் ஆழ்கடல் பகுதியில் கைவிடப்பட்ட பேருந்துகளை இறக்கும் செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. எனினும், இந்த செயற்பாட்டின் காரணமாக தமது வலைகளுக்கு சேதம் ஏற்படுவதோடு படகுகளும் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாக இராமேஸ்வரம் மீனவர்கள் குறிப்பிடுகின்றனர்.

இந்தாண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக மீனவர்கள் மீன்பிடி தடை காலத்தில் தங்களது படகுகளை மராமத்துப் பணி செய்யாததால் மேலும் 15 நாட்கள் மீன் பிடிக்க செல்லாமல் படகுகளை மராமத்தது பணி செய்து விட்டு எதிர்வரும் 30ஆம் திகதிக்கு மேல் மீன் பிடி கடலுக்கு செல்லாம் என முடிவு செய்துள்ளனர்.இதனையடுத்து நேற்று ராமேஸ்வரம் மீன்பிடி டோக்கன் அலுவலக வளாகத்தில் விசைப்படகு மீனவர்கள் அவசர ஆலோசனைக் கூட்டம் நடத்தினர்.

மீனவர்கள் நடத்திய கூட்டத்தில் தொடர்ந்து தமிழக மீனவர்களின் மீன்பிடி தொழிலை அளிக்கும் நோக்கத்தோடு இலங்கை அரசு சர்வதேச கடல் எல்லையில் இருந்து அருகே இந்திய, இலங்கை மீனவர்கள் பாரம்பரியமாக மீன் பிடித்து வரும் இடங்களான கச்சத்தீவு, நெடுந்தீவு, நயினாதீவு பகுதிகளில் பயன்பாட்டில் இல்லாமல் கைவிடப்பட்ட இலங்கை போக்குவரத்து துறைக்கு சொந்தமான பேருந்துகளை கடல் பரப்பில் இறக்கி வருகின்றனர்.

பேருந்துகளின் கூடுகளை கடலில் இருக்கும் போது கடல் மாசு படுவதுடன் தமிழக மீனவர்கள் இந்திய கடற்பரப்பில் மீன் பிடித்தாலும் அவர்கள் விரிக்கும் மீன்பிடி வலைகள் காற்றின் வேகம் காரணமாகவும், கடல் நீரோட்டம் காரணமாக இலங்கை கடற்பகுதிக்கும் செல்லகூடும் இதனால் படகுகள் மற்றும் வலைகள் சேதமடைந்து நஷ்டம் ஏற்படும் என்பதால் உடனடியாக இலங்கை மீன்வளத்துறை இந்த திட்டத்தை கைவிட வேண்டும் என வலியுத்தியுள்ளதுடன், நாளைய தினம் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe