இந்தியாவில் இருந்து ஐக்கிய அரபு அமீரகத்திற்கு இயக்கப்படும் விமானங்களானது குறைந்தபட்சம் ஆகஸ்ட் 2 வரை நிறுத்தி வைக்கப்படும் என்று அமீரகத்தைச் சேர்ந்த விமான நிறுவனமான எதிஹாட் ஏர்வேஸ் திங்களன்று தெரிவித்துள்ளது.
விமான நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை பிரதிநிதிகள் அதன் அதிகாரப்பூர்வ சமூக ஊடகப் பக்கத்தில் இந்த புதிய தகவலை பயணிகளுக்கு தெரிவித்துள்ளனர்.
ஐக்கிய அரபு அமீரக அதிகாரிகளின் உத்தரவுகளைப் பொறுத்து இந்த தேதியானது மேலும் நீட்டிக்கப்படலாம் என்றும் விமான நிறுவனம் மேலும் கூறியுள்ளது.
கடந்த ஏப்ரல் 24 ம் தேதி இந்தியாவில் இருந்து அமீரகத்திற்கு இயக்கப்படும் விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டன. மூன்று மாத காலமாகியும் இத்தடை நீண்டு கொண்டே இருப்பது இந்தியாவில் சிக்கித்தவிக்கும் பலரையும் கவலைக்குள்ளாக்கி வருகிறது.
News from - www.khaleejtamil.com