Ads Area

பாகிஸ்தான் தூவவராலயத்தின் செயலாளர் ஆயிஷா மற்றும் தவிசாளர் நெளஷாட் ஆகியோர்களுக்கிடையில் சந்திப்பு.

 (எம்.எம்.ஜபீர்)

பாகிஸ்தான் இஸ்லாமிய குடியரசின் உயர் ஸ்தானிகராலயத்தின் கல்வி, அரசியல், கலாச்சார செயலாளர் ஆயிஷா அபுபக்கர் பஹத்  சம்மாந்துறைக்கு இன்று (11)  விஜயமொன்றை மேற்கொண்டார்.

இவ்விஜயத்தின் போது சம்மாந்துறை பிரதேச சபை தவிசாளரும், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான ஏ.எம்.முஹம்மட் நெளஷாட் அவர்களை பிரதேச சபை அலுவலகத்தில்  சந்தித்து கலந்துரையாடினார்.

இதன்போது பிரதேசத்தின் கல்வி, கலாச்சாரம், அபிவிருத்தி மற்றும் சமகால அரசியல் தொடர்பாக கேட்டரிந்து கொண்டதுடன்  எதிர்காலத்தில் பிரதேசத்தின் கல்வி உள்ளிட்ட மக்களின் அடிப்படை தேவைகளையும் மேம்படுத்த  பாகிஸ்தான் அரசாங்கத்தின் ஒத்துழைப்பு அவசியம் தொடர்பாக  ஆயிஷா அபுபக்கர் பஹதிடம் தவிசாளர் வழியுறுத்தினார்.

இச்சந்திப்பில் கிழக்கு மாகாண தகவல் தொழில்நூட்ப பேரவையின் தவிசாளரும், தென்கிழக்கு பல்கலைக்கழக பேரவை உறுப்பினருமான கலாநிதி அன்வர்.எம்.முஸ்தபாவும் கலந்து கொண்டனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe