சம்மாந்துறை அன்சார்.
இலங்கை தூதுவராலயத்தின் நடமாடும் கன்சியூலர் சேவை நேற்று முந்தினம் (2021 ஜூலை 30ம் திகதி வெள்ளிக்கிழமை) காலை 09 மணி முதல் மாலை 04.30 மணி வரை சவுதி அரேபியாவின் கிழக்குப் பிராந்திய நகரமான அல் கோபரில் யுனிபைட் வீசா அப்லிகேஷன் நிலையம் (Unified Visa Application Center), இடம் பெற்றது.
இந் நடமாடும் கன்சியூலர் சேவை மூலமாக கணிசமான எண்ணிக்கையிலான தூதரக மற்றும் தொழிலாளர் தொடர்பான சேவைகளை சவுதியின் கிழக்கு பிராந்தியத்தில் வாழும் இலங்கையர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக இலங்கைத் துாதரகம் தெரிவித்துள்ளது.
சவுதி அரேபியாவின் கிழக்கு பிராந்தியத்தில் வசிக்கும் இலங்கை வெளிநாட்டவர்களின் தீவிர தேவையை கருத்தில் கொண்டு, இந்த நடமாடும் சேவை சேவை தொடங்கப்பட்டது.
சவுதி அரேபியாவில் உள்ள துாதரப் பிரதேசங்களில் இருந்து தலைநகர் ரியாத்தில் உள்ள இலங்கைத் துாதரகத்திற்கு வர முடியாமல் சிரமப்படும் இலங்கையர்களின் நன்மை கருதியே இந்த நடமாடும் சேவை அல்-கோபார் பகுதியில் இடம் பெற்றுள்ளது.