ஐக்கிய அரபு அமீரகத்தில் உள்ள ஷார்ஜாவின் கிங் பைசல் தெருவில் அமைந்துள்ள அடுக்குமாடி குடியிருப்பு கட்டடத்தின் 32 வது மாடியில் இருந்து ஆசிய நாடுகளில் ஒன்றைச் சேர்ந்த 10 வயது குழந்தை ஒன்று கீழு விழுந்து உயிரிழந்துள்ளது.
ஷார்ஜா போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்கு நேற்று புதன்கிழமை கிடைத்த தகவலுக்கு அமைய அங்கு விரைந்த பொலிஸார் சம்பவ இடத்திலேயே குழந்தை இறந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
விபத்துக்கான காரணத்தை கண்டறிய உடல் தடயவியல் ஆய்வகத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், விபத்துக்கான சூழ்நிலையினை விசாரிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.
இதே போல் ஐக்கிய அரபு அமீரகத்தில் சமீபத்தில் புஜைராவில் உள்ள தனது பெற்றோரின் வீட்டிலிருந்து ஜன்னல் வழியாக விழுந்து எட்டு வயது நிரம்பிய அரேபிய குழந்தை ஒன்றும் மரணித்துள்ள சம்பவமும் பதிவாகியுள்ளமை குறிப்பிடத் தக்கதாகும்.
செய்தி மூலம் - https://www.khaleejtimes.com
தமிழில் - சம்மாந்துறை அன்சார்.
