Ads Area

சவுதி அரேபியாவின் ஜிசான் நகரில் கிங் அப்துல்லா விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் - 16 பேர் காயம்!

சவூதி அரேபியா விமான நிலையத்தில் புகுந்த ட்ரோனை இடைமறித்து அழித்த போது ஏற்பட்ட வெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர் என அந்நாட்டு பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது.

யேமனில் அரசு படைக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே உள்நாட்டு போர் நடந்து வருகிறது. இதில் யேமன் அரசுக்கு சவூதி அரேபியா தலைமையிலான கூட்டுப்படைகள் ஆதரவு அளித்துள்ளது. இப்படையில் ஐக்கிய அரபு அமீரகமும் உள்ளது.

இந்த நிலையில் கடந்த மாதம் ஐக்கிய அரபு அமீரகத்தின் தலைநகர் அபுதாபியில் உள்ள விமான நிலையம், எண்ணை நிறுவனத்தை குறி வைத்து ஹவுதி கிளர்ச்சியாளர்கள் ட்ரோன் (ஆளில்லா விமானம்) மூலம் நடத்திய தாக்குதலில் 3 பேர் உயிரிழந்தனர். இதற்கு பதிலடியாக சவுதி அரேபியா, ஹவுதி கிளர்ச்சியாளர்கள் மீது வான்வெளி தாக்குதல் நடத்தியது.

இதன் தொடர்ச்சியாக தற்போது சவுதி அரேபியாவில் உள்ள விமான நிலையத்தில் ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டு உள்ளது. சவுதி அரேபியாவின் தெற்கு பகுதியில் உள்ள ஜிசான் நகரில் கிங் அப்துல்லா விமான நிலையத்தை குறி வைத்து வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் மூலம் தாக்குதல் நடத்தப்பட்டது.

விமான நிலையத்தில் புகுந்த டிரோனை இடைமறித்து அழித்த போது ஏற்பட்ட வெடிப்பில் 16 பேர் காயமடைந்தனர். இதில் 3 பேரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. வெடிகுண்டு நிரப்பப்பட்ட ட்ரோன் யேமன் தலைநகர் சனா விமான நிலையத்தில் இருந்து ஏவப்பட்டதாக சவூதி அரேபியா பாதுகாப்பு படை குற்றம்சாட்டியுள்ளது.







(File picture shows damage after an earlier Houthi attack in the Saudi region of Jizan - Pic from Gulf News) 

Image Credit: Saudi Civil Defence

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe