நூருல் ஹுதா உமர்
அங்கவீனமுற்ற நபர்களுக்கான தேசிய செயலகத்தின் நிதி ஒதுக்கீட்டில் காரைதீவு பிரதேச செயலகப் பிரிவில் வசிக்கும் குறைந்த வருமானமுடைய சிறுநீரக நோயிற்கான சிகிச்சையினை பெற்றுக் கொள்பவர்களுக்கான கொடுப்பனவு காரைதீவு பிரதேச செயலாளர் சிவஞானம் ஜெகராஜன் அவர்களினால் இன்று மாவடிப்பள்ளி கிழக்கு, மாளிகைக்காடு மத்தியைச் சேர்ந்த 02 பயனாளிகளுக்கு காசோலைகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது காரைதீவு பிரதேச செயலக சமூகசேவை உத்தியோகத்தர் கு.குணரட்ணம், அபிவிருத்தி உத்தியோகத்தர் சித்தி நளிபா, மாவடிப்பள்ளி கிழக்கு கிராமசேவை உத்தியோகத்தர் ஏ.எம். அலியார், மாளிகைக்காடு மத்தி கிராமசேவை உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டனர் .