Ads Area

சவுதியிலிருந்து சென்னைக்கு விடுமுறை சென்று மீண்டும் சவுதி வர தயாராக இருப்போருக்கான முக்கிய அறிவித்தல்.

 நேற்று முன்தினம் சென்னையிலிருந்து ரியாத் புறப்படுவதற்காக சென்னை விமான நிலையம் வந்த பயணி ஒருவருக்கு ஏற்பட்ட அனுபவத்தை இங்கே பகிர்கிறோம்.

சவுதியில் 2 டோஸ் தடுப்பூசி எடுத்துவிட்டு, விடுமுறைக்காக தாயகம் வந்து, மீண்டும் சென்னையிலிருந்து ரியாத் புறப்படும்போது, சென்னை விமான நிலையத்தில் அவருடைய தவக்காலநாவை பரிசோதித்தபோது no immune என்று வந்துள்ளது. இதன் காரணமாக இவர் பயணம் செய்வதற்கு அதிகாரிகள் அனுமதிக்கவில்லை. (Quarantine) ஹோட்டல் புக்கிங் இருந்தால் மட்டுமே அனுமதிக்கப்படுவீர்கள் என்று அதிகாரிகள் தெரிவித்துவிட்டனர்.

இவர் சவுதியில் இரண்டாவது டோஸ் எடுத்து, 8 மாதம் முடிவடைந்த காரணத்தால் தவக்கல்நாவல் no immune என்று வந்துள்ளது. 

சவுதி அரேபியாவின் புதிய அறிவிப்பு படி பிப்ரவரி முதல் இரண்டாவது டோஸ் எடுத்து, 8 மாதம் முடிவடைந்து விட்டால்,  தவக்கல்நாவில் நோய் எதிர்ப்பு நிலை இருக்காது. ஆதலால் 8 மாதம் முடிவதற்குள் பூஸ்டர் டோஸ் எடுக்க வேண்டுமென்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியாகியிருந்தது. 

தற்பொழுது நாம் கவனிக்க வேண்டியவை என்னவென்றால் தற்பொழுது விடுமுறைக்காக தாயகத்தில் இருப்பவர்கள், சவுதியில் இரண்டாவது டோஸ் எடுத்து, 8 மாதம் நிறைவடைவதற்கு முன்பாக சவுதி அரேபியாவிற்கு நுழைவதற்காக முயற்சி எடுக்க வேண்டும்.

அதேபோல் 8 மாதம் முடிவடைந்தவர்கள் இந்தியாவில் பூஸ்டர் டோஸ் எடுத்துவிட்டு moh இணையதளத்தில் அப்லோட் செய்து immune பெற முடியும் என்று கூறப்படுகின்றன. 

அதேபோல் இதன் பிறகு சவுதி அரேபியாவில் இருந்து தாயகம் செல்பவர்கள் பூஸ்டர் டோஸ் எடுத்து விட்டு தாயகம் செல்வது சிறந்தது.

தகவலுக்கு நன்றி - Saudi News - சவூதி நியூஸ்



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe