Ads Area

சம்மாந்துறையில் வீடொன்றில் ஏற்பட்ட தீயினால் பெரும் சேதம்.

 சம்மாந்துறை நிருபர் ஐ.எல்.எம் நாஸிம்

அம்பாறை - சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சம்மாந்துறை புளோக் ஜே மேற்கு 1  பிரிவில்  உள்ள வீடொன்றில் நேற்று இரவு ஏற்பட்ட தீ விபத்தினால் வீட்டிலுள்ள அனைத்து பொருட்களும் தீயில் எரிந்து சாம்பலாகியுள்ளது.

நேற்று இரவு 6.00 மணியளவில் மின்சாரம் தடைப்பட்டிருந்த வேளையில் குறித்த வீட்டில் உள்ளவர்கள் தமது வீட்டிக்கு பக்கத்தில் உள்ள உறவினரின் வீட்டுக்கு சென்றுள்ளனர். பின்னர் மின்சாரத்திற்குரிய தடை விலகிய பின்னர் (அதாவது மின்சாரம் வந்ததன்)பின்னர் இரவு 9.30 மணியளவில் தமது வீட்டுக்கு வந்த போது  வீட்டின்உள்ளே இருந்து புகை வெளியாகிக் கொண்டிருப்பதனை அவதானித்துள்ளனர். 

அதனைத் தொடர்ந்து வீட்டுக்குள் சென்ற போது வீட்டின் ஒரு அறையில் இருந்த மடிகணிணி உடுதுணிகள் மற்றும்  பெறுமதி வாய்ந்த பொருட்கள் யாவும் தீயில் எரிந்துள்ளதைக் கண்டுள்ளனர். 

வீட்டின் கூரைக்கு போட்டுள்ள சீட்டும் உடைந்துள்ளது.இச்சம் பவம் குறித்து சம்மாந்துறை பொலிஸில்முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது. பொலிஸார் மேலதிக  விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe