சம்மாந்துறை அன்சார்.
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு எரிபொருள் சலுகைகள் வழங்கப்படுவதைக் கேட்டு தான் அதிர்ச்சியடைந்துள்ளதாக முன்னாள் கிரிக்கட் வீரர் சனத் ஜெயசூரிய தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் அவர் தனது முகநுால் பக்கத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
பாராளுமன்ற உறுப்பினர்கள் மக்கள் சேவையாளர்கள் அன்றி வேறுயாருமில்லை இந்நாட்டு மக்கள் சொல்லொணா துயரங்களை அனுபவித்து வருகின்றனர். உங்களுக்கு மூன்று வழிகள்தான் உள்ளன இந்தப் பிரச்சினைகளை விரைவில் தீருங்கள், அல்லது எங்களுடன் இணைந்து கஷ்டப்படுங்கள் அல்லது வீட்டிற்குச் செல்லுங்கள்.
வரலாற்றில் இருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பிரன்ஞ் புரட்சியின் போது மக்களுக்கு உண்ண ரொட்டி இல்லாதபோது கேக் சாப்பிடுவது பற்றி Marrie Antoinette-ன் பிரபலமான வார்த்தைகளை நினைவில் கொள்க எனத் தெரிவித்துள்ளார்.