Ads Area

சம்மாந்துறை 'அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' கூட்டுறவு சங்க ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு.

நூருள் ஹுதா உமர், எம்.என்.எம். அப்ராஸ்

சம்மாந்துறை 'அல்-மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க கடன்,வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம் பவுண்டேஷன் தயாரித்த ஆவணப்படம் வெளியிடும் நிகழ்வு சம்மாந்துறை அப்துல் மஜீத் மண்டபத்தில் சம்மாந்துறை பிரதேச சபை முன்னாள் தவிசாளரும், அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு சிக்கன கடன் கூட்டுறவு சங்கத்தின் தலைவருமான ஐ.எம். இப்ராஹீம் தலைமையில் நடைபெற்றது.

அல் மஸ்ரபுல் இஸ்லாமிய்யு இஸ்லாமிய கடன், வைப்புச் சேவை கடந்த 25 வருடங்களாக சம்மாந்துறையில் இயங்கி வருகிறது. தற்போது கூட்டுறவுத் திணைக்களத்தின் ஊடாக அரச அங்கீகாரத்தை பெற்று நவீனமுறையில் சேவையாற்றி வருகின்றது. வட்டியிலிருந்து சமூகத்தை பாதுகாப்பதோடு மக்களின் சேமிப்புப் பழக்கத்தை ஊக்குவிப்பதுடன் அவர்களது பொருளாதார கஷ்டங்களை நிவர்த்தி செய்வதற்கு கடன் வழங்கியும் இந்நிறுவனம் பாரிய சேவை ஆற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

அவர்களது பணிகளைப் பாராட்டி ஊக்குவிப்பதோடு அப் பணிகள் தொடர்பான விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்காக 'அல்மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' கடன், வைப்புச் சேவை பற்றி ஸம் ஸம் பவுண்டேஷன் இந்த ஆவணப்படத்தை தயாரித்து வெளியிட்டுள்ளது. 

இந்நிகழ்வில் கிழக்கு மாகாண கூட்டுறவு ஆணையாளர் ஏ.எல். அஸ்மி, சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனீபா, ஸம் ஸம் பவுண்டேஷன் பணிப்பாளர் முப்ஃதி எம்.எச். எம். யூஸுப், கூட்டுறவு திணைக்கள சிரேஷ்ட கூட்டுறவு அதிகாரி ஐ.எல்.எம். பரீட், அம்பாறை மாவட்ட பல்வேறு பகுதிகளையும் சேர்ந்த பள்ளிவாசல்களின் நிர்வாகிகள், பெருந்திரளான உலமாக்கள், மதரஸாக்களின் நிர்வாகிகள், பொது அமைப்புக்களின் முக்கிய நிர்வாகிகள், சம்மாந்துறை 'அல்மஸ்ரபுல் இஸ்லாமிய்யு' சிக்கன கடனுதவி கூட்டுறவு சங்க பணிப்பாளர் சபையினர் மற்றும் நிர்வாகத்தினர், ஸம் ஸம் பவுண்டேஷன் நிர்வாகிகள் எனப்பலரும் கலந்து கொண்டனர்.







Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe