(எம்.ஆர்.எம்.வசீம், இராஜதுரை ஹஷான்)
உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என சபை முதல்வர் அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார். பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (18) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய விசேட கேள்வியொன்றுக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.
சஜித் பிரேமதாச கேள்வியெழுப்பி கூறுகையில்,
உள்ளூராட்சி தேர்தலை ஒத்தி வைப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுவதாக பல்வேறு இடங்களில் கதைக்கப்படுகின்றன. காலம் தாழ்த்தாது குறித்த காலத்தில் உள்ளூராட்சி தேர்தல் நடத்த நடவடிக்கை எடுக்கப்படுமா இல்லையா என்பதனை உறுதியாக கூற முடியுமா? அவ்வாறு இல்லையெனில் அரசாங்கம் தேர்தலுக்கு பயப்படுகின்றது என்றே தெரிவிக்கின்றோம் என்றார்.
இதன்போது பதிலளித்த சபை முதல்வரான அமைச்சர் சுசில் பிரேமஜயந்த கூறுகையில், உள்ளூராட்சி மன்ற தேர்தலை ஒத்தி வைப்பதற்காக எந்தவொரு கலந்துரையாடலும் நடத்தப்படவில்லை என்றார்.
thanks - virakesari