Ads Area

சம்மாந்துறை பிரதேச சபையினால் கொரிய மொழிக் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரல்.

சம்மாந்துறை பிரதேச சபை ஆளுகைக்குட்பட்ட 18 வயதிற்கும் 30 வயதிற்கும் இடைப்பட்ட இளைஞர் யுவதிகளுக்கான வெளிநாட்டு தொழில்வாய்பை ஏற்படுத்தும் நோக்கில் சம்மாந்துறை பிரதேச சபையினால் கொரிய மொழிக் கற்கை நெறிக்கான விண்ணப்பம் கோரப்படுகின்றது.

இக்கற்கைக்கான பதிவினை  2022.10.15 ஆம் திகதி சனிக்கிழமைக்கு முன்னர் பெயர், தேசிய அடையாள அட்டை இலக்கம், முகவரி மற்றும் தொலைபேசி இலக்கம் போன்ற விபரங்களை பதிவு செய்யுமாறு வேண்டிக்கொள்கின்றோம்.

மேலதிக தகல்களை பெற்றுக் கொள்வதற்கு சம்மாந்துறை பிரதேச சபை தகவல் மையத்திற்கு 067 20 30 800 அல்லது இக்கற்கை நெறிக்கான இணைப்பாளர் ஐ.எல்.சப்றி                 (077 230 9246) ஆகிய இலக்கங்களை தொடர்பு கொண்டு மேலதிக விபரங்களை பெற்றுக் கொள்ள முடியும்.

குறிப்பு : போதியளவு பதிவு கிடைக்கும் பட்சத்தில் மாத்திரம் இக்கற்கை நெறியை ஆரம்பிப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.


தகவல் மையம்

சம்மாந்துறை பிரதேச சபை

2022.10.11



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe