ஐக்கிய அரபு அமீரகம் மற்றும் ஓமன் இடையிலான நல்லுறவை மேம்படுத்தவும், பயணிகள் மற்றும் சரக்கு போக்குவரத்து சுலபமாக்க 303 கிமீ நீளமுள்ள ரயில்வே திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளனர்.
பயணிகள் ரயில்கள் மணிக்கு 200 கிமீ வேகத்திலும், சரக்கு ரயில்கள் மணிக்கு 120 கிமீ வேகத்தில் இயக்க திட்டமிடப்பட்டுள்ளது. மேலும், சோஹாரிலிருந்து அல்ஐனுக்கு 47 நிமிடங்களிலும், அபுதாபிக்கு ஒரு மணி நேரம் 40 நிமிடங்களில் வந்து சேர்ந்து விடலாம்.
இரண்டு நாள் அரசு முறை பயணமாக ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜனாதிபதி ஓமனுக்கு பயணம் மேற்கொண்டு உள்ளதால் இந்த அறிவிப்பு வந்துள்ளன