சம்மாந்துறை விளையாட்டு கழகத்திற்கான (எஸ்.எஸ்.சி) கடினபந்து கிரிக்கெட் உபகரணம் வழங்கிவைக்கும் நிகழ்வு நேற்று முன்தினம் இடம்பெற்றது.
கழகத்தின் செயலாளர் அஜ்வத் ஆசிரியர் தலைமையில் நடைபெற்ற இந் நிகழ்வில் பிரதம அதிதியாக சமூக சேவையாளரும், விஞ்ஞான முதுமானியுமான அஸ்மி யாஸீன் அவர்கள் கலந்துகொண்டு குறித்த உபகரணங்களை கழகத்தினரிடம் வழங்கிவைத்தார்.
இக் கழகமானது சம்மாந்துறையில் மாத்திரமல்லாது, முழு அம்பாறை மாவட்டத்திலும் கடினபந்து கிரிக்கெட் விளையாட்டில் பிரபல அணியாக திகழ்ந்துவருகின்றமை சிறப்பம்சமாகும்.
கழகத்தின் விளையாட்டுக்கழக முகாமையாளரினால் சமூக செயற்பாட்டாளர் அஸ்மி யாஸீன் அவர்களிடம் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமைய கடினபந்து கிரிக்கெட் விளையாட்டுக்கு தேவையான கால் பாதுகாப்பு அங்கிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இதன் போது விளையாட்டு கழக நிர்வாகிகள், கழக வீரர்கள், விளையாட்டு ஆர்வலர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.