நூருல் ஹுதா உமர்
முன்னாள் பிரதி அமைச்சர் முத்து சிவலிங்கம் அவர்கள் மலையக மக்களினுடைய கல்வி , சமூகம் சார்ந்த பல்வேறுபட்ட பிரச்சினைகளுக்காக முழுப்பங்களினை வழங்கி அயராது பாடுபட்டவர். இலங்கை தொழிலாளர் காங்கிரஸினுடைய மூத்த தலைவர் சௌமிய மூர்த்தி தொண்டமான், ஆறுமுகம் தொண்டமான் உட்பட இன்றைய தலைவர் வரையிலும் முழுமையாக இருந்து செயற்பட்டவர் என கிழக்கு மாகாண முன்னாள் முன்னாள் ஆளுநர் டாக்டர் எம்.எல்.எம்.ஏ.ஹிஸ்புழ்ழாஹ் விடுத்துள்ள அனுதாப செய்தியில் தெரிவித்துள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அனுதாப செய்தியில் தொடர்ந்தும், பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சராக பசில் ராஜபக்ஷ இருந்த போது அவரும் என்னோடு இணைந்து செயற்பட்டவர். சுமார் இரண்டு, மூன்று ஆண்டுகளாக என்னோடு இணைந்து செயற்பட்டவர். குறிப்பாக சகல இனங்களையும் நேசித்தவர். அவரது மறைவுச் செய்தி கேட்டு நான் ஆழ்ந்த கவலை அடைகின்றேன். அவரது குடும்ப உறுப்பினர்கள், மலையக தொழிலாளர் காங்கிரஸ் கட்சியினுடைய உறுப்பினர்கள் அனைவருக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று குறிப்பிட்டுள்ளார்.