Ads Area

பால்நிலை மற்றும் ஜனநாயகம் தொடர்பான இரு நாள் செயலமர்வு..!

 (எம்.என்.எம்.அப்ராஸ்)


சமூக அபிவிருக்கான நிறுவனத்தின் (ISD) ஏற்பாட்டில் அம்பாறை மாவட்டத்தில் உள்ள கிராம மட்ட ஒத்துழைப்பு அங்கத்தவர்கள், அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இளைஞர்கள், யுவதிகளுக்கானபால்நிலை மற்றும் ஜனநாயகம் தொடர்பான இரு நாள் செயலமர்வு கடந்த  (2022.11.02 மற்றும் 04 ம் திகதிகளில்) அம்பாரை மாவட்டம் காரைதீவு தனியார் மண்டபமொன்றில் இடம் பெற்றது.

இச் செயலமர்வானது சமூக அபிவிருக்கான நிறுவனத்தின்  பிராந்திய திட்ட உத்தியோகத்தர் எம்.எஸ்.ஜலீல் தலைமையில் சமூக அபிவிருக்கான நிறுவனத்தின் வலையமைப்பான (TRF) பங்காளர் நிறுவனமான ஸ்பீட்  நிறுவனத்தின் திட்ட இணைப்பாளர் எம்.ஐ.றியால் அவர்களின் ஒருங்கிணைப்பில் நடைபெற்றது.

இச் செயலமர்வுக்கு இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் சமூகவியல் சிரேஷ்ட விரிவுரையாளர் மின்னதுல் சுஹீரா வளவாலராக கலந்து  கொண்டு பால்நிலையும் மற்றும் ஜனநாயகம் என்றால் என்ன? என்பது பற்றி கருத்துரைக்கப்பட்டதுடன் அது ஒவ்வொரு தனி நபர்கள்(ஆண்,பெண்) குடும்பம்,மற்றும் சமூகத்தின் மத்தியில் காணப்படும் வகிபாக நிலைகள் எவ்வாறு இருக்கின்றது? இதனால் ஏற்ப்படும் நன்மைகள்,பாதிப்புக்கள்,அதற்கான தீர்வுகள், பால்நிலையில் ஜனநாயகத்தின் முக்கியத்துவம் சமூக மட்டத்தில்,தேசிய நிலையில் ஜனநாயகத்தின் நிலை எவ்வாறு உள்ளது தொடர்பில் கொண்டு சிறந்த முறையில் கருத்துரைத்தார்.

அத்துடன் இச் செயலமர்வில் பெண்கள் உள்ளுராட்சி மன்றங்களில் பங்குபற்றல் அவசியமா? இல்லையா?என்பது பற்றி சிறப்பு விவாதமொன்று இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது

மேலும் இச் செயலமர்வில் அரசசார்பற்ற நிறுவனங்களின் அம்பாரை மாவட்ட செயலக உத்தியோகத்தர் ஐ.எல்.எம்.இர்பான் அவர்களும் கலந்து கொண்டார்.

Slideshow

1 / 5
2 / 5
3 / 5
4 / 5
5 / 5

Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe