Ads Area

கர்ப்பிணி தாய்மார்களுக்கு ரூ10,000/- மேலதிக உணவுக்கான உதவித் தொகை வழங்கும் செயற்றிட்டம் !

 நூருல் ஹுதா உமர்


“உணவுப் பாதுகாப்பு மற்றும் வாழ்வாதார மீட்பித்தல்களுக்கான அவசர உதவி செயற்றிட்டம்” எனும் தலைப்பின் கீழ் ‘மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுப்படுத்துகை அமைச்சினால்’ கர்ப்பிணி அல்லது பாலூட்டும் தாய் ஒருவருக்கு ரூ.10,000/- மேலதிக கொடுப்பனவொன்றை 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் முதல் டிசம்பர் மாதம் வரை 04 மாதங்களுக்கு வழங்கும் இச் செயற்றிட்டத்திற்கு இறக்காமம் பிரதேச செயலக மகளிர் மற்றும் சிறுவர் பிரிவினால் தகவல்கள் கோரப்பட்டு எடுக்கப்பட்ட தகவல்களுக்கு அமைய மேலதிக அவசர தொகை பயனாளிகளுக்கு வழங்க தீர்மானிக்கப்பட்டிருந்தது.  


அந்தவகையில் கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களின் போஷணை மட்டத்தை உயர்த்தி ஆரோக்கியமான சமூகத்தை உருவாக்கும் நோக்கில் அரசாங்கத்தினால் சமுர்த்தி வங்கிகள் ஊடாக ரூபா 10,000/- நிதி வழங்கி வைக்கும் நிகழ்வுகள் தேசிய ரீதியில் இடம்பெற்று வருகின்றன.


இத்திட்டத்திற்கமைய இறக்காமம் பிரதே செயலகத்திற்குட்பட்ட 382 கர்ப்பிணி மற்றும் பாலூட்டும் தாய்மார்களுக்கான ரூ.10,000/- கொடுப்பனவு வழங்கி வைக்கும் நிகழ்வு செவ்வாய்க் கிழமை இறக்காமம் சமுர்த்தி வங்கியில் இடம்பெற்றது. சமுர்த்தி வங்கியின் முகாமையாளரும் சிரேஷ்ட ஊடகவியலாளருமான  ரீ.கே.றஹ்மத்துல்லா தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார். மேலும் சிறப்பு அதிதிகளாக சமுர்த்தி தலைமைப்பீட முகாமையாளர் எம்.சி.எம்.தஸ்லீம், கருத்திட்ட முகாமையாளர் திருமதி பிரியந்தி, மகளிர் மற்றும் சிறுவர் பிரிவில் கடமையாற்றும் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உத்தியோகத்தர் ஆர்.எம். இம்டாட், அபிவிருத்தி உத்தியோகத்தர் கே.எம். இர்பான் உள்ளிட்ட அதிதிகள் கலந்து பயனாளிகளுக்கான பணத்தினை வழங்கி வைத்தனர்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe