முஸ்லிம் பாடசாலைகளுக்கு புனித ரமழான் காலத்தில் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. இருப்பினும் எமது பிரதேசத்தில் உள்ள
தனியார் பாடலைகள் (ரியூசன் சென்டர்கள்) இக் காலத்தில் இரவு நேரத்தில் கூட வகுப்புக்களை நடாத்துவது அவதானிக்கப்பட்டுள்ளது.
இச் செயற்பாடு முழு நேர வகுப்புக்கள் கற்பிக்கும் ஆசிரியர்களுக்கும், கற்கும் மாணவர்களுக்கும் கிரகிக்கக் கூடிய அளவு பிரயோசனம் அளிக்காது.
இன்று (2023.03.28) பிரதேச செயலாளர், பிரதேச சபை செயலாளர், கௌரவ நம்பிக்கையாளர் சபை தலைவர், சுகாதார வைத்திய அதிகாரி ஆகியோர் பங்குபற்றுதலுடன் இடம்பெற்ற கூட்டத்தில்,
புனித றமழான் 20 வரையும் மு.ப. 12மணி வரை வகுப்புக்களை நடாத்துவதற்கும், புனித றமழான் கடைசி 10 எதுவித பிரத்தியோக வகுப்புக்களையும் நடாத்தக் கூடாது எனவும் தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எனவே, குறித்த தீர்மானத்திற்கமைய தனியார் கல்வி நிறுவன உரிமையாளர்கள் செயற்படுமாறு கேட்டுக் கொள்ளப்படுகின்றீர்கள்.
இப்படிக்கு
நம்பிக்கையாளர் சபை, சம்மாந்துறை
பிரதேச சபை, சம்மாந்துறை
சுகாதார வைத்திய அதிகாரி , சம்மாந்துறை
பிரதி பொலிஸ்நிலைய பொறுப்பதிகாரி, சம்மாந்துறை