Ads Area

பால்மாவின் விலை குறைப்பு ..!

 இன்று முதல் பால்மாவின் விலையை குறைப்பதற்கு பால்மா நிறுவனங்கள் தீர்மானித்துள்ளன.


ஒரு கிலோகிராம் பால்மாவின் விலையை 200 ரூபாவாலும், 400 கிராம் பால்மாவின் விலையை 80 ரூபாவாலும் குறைப்பதற்கு பால்மா இறக்குமதியாளர் சங்கம் தெரிவித்துள்ளது.


தனடிப்படையில், இன்று முதல் பால் தேநீர் கோப்பை ஒன்றை 90 ரூபாவுக்கு பெற்றுக்கொள்ள முடியும் என அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.


பால்மா மற்றும் சீனி என்பவற்றின் விலைகள் குறைக்கப்பட்டுள்ளதன் காரணமாக அதன் பயனை மக்களுக்கு வழங்கும் நோக்கில் இந்த விலை குறைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.


பால் தேநீர் தற்போது 100 ரூபா முதல் 130 ரூபாவுக்கு இடைப்பட்ட விலைகளில் விற்பனை செய்யப்படுவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் குறிப்பிட்டார்.


இதேவேளை, மரக்கறிகள் மற்றும் மீன்களின் விலைகள் தற்போது குறிப்பிடத்தக்களவு குறைந்துள்ளமையினால் உணவுப்பொதி தொடர்பில் எமது செய்தி சேவை அந்த சங்கத்தின் தலைவர் அசேல சம்பத்திடம் வினவியது, அதற்கு பதிலளித்த அவர்,


உணவுப் பொதியின் விலை குறைக்கப்பட வேண்டும்.

ஆயிரத்து 300 ரூபாக்கும் அதிக விலைகளில் விற்பனை செய்யப்பட்ட மீன்களின் விலை, தற்போது 600 ரூபாவுக்கும் குறைந்த விலைகளில் விற்பனை செய்யப்படுகின்றன.மரக்கறிகளின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.பருப்பு, கிழங்கு என்பற்றின் விலைகளும் வீழ்ச்சியடைந்துள்ளன.நாட்டில் உள்ள பொதுமக்கள் மூன்று வேளை முறையாக உண்பதுக்கு சரியான வேலைத்திட்டங்கள் இல்லை.


ஆகையால் எமது சங்கம் வாடிக்கையாளர்களின் நலன்களை கருத்தில் கொண்டு உணவுப் பொதியின் விலைகளை குறைக்க வேண்டும் என வலியுறுத்துகிறோம்.


எனவே, உணவுப் பொதிகளின் விலைகள் குறைக்கப்படாவிட்டால், அதனை வாடிக்கையாளர்கள் சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்களிடம் கேட்டுப் பெற்றுக்கொள்ளுமாறு தாம் வலியுறுத்துவதாக அகில இலங்கை உணவக உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.



Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe