50 கிலோ யூரியா உர மூடையின் விலையை 7,000.ரூபாவினால் குறைக்க உர நிறுவனங்கள் இணக்கம் தெரிவித்துள்ளன.
விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர மற்றும் இலங்கைக்கு உரங்களை இறக்குமதி செய்யும் பல நிறுவனங்களின் பிரதிநிதிகளுடன் இடம்பெற்ற கலந்துரையாடலை அடுத்து இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
இச்சந்திப்பின் போது, தனியார் நிறுவனங்களின் உரங்களின் விலையை குறைக்குமாறும், குறிப்பாக அரசாங்கம் விவசாயிகளுக்கு யூரியாவை 10,000.ரூபாவுக்கு வழங்குவதால், அவற்றின் விலையை குறைக்குமாறும் அமைச்சர் பிரதிநிதிகளிடம் கோரிக்கை விடுத்தார்.
அதன்படி தற்போது 18,500 ரூபாவுக்கு விற்பனை செய்யப்படும் 50 கிலோ யூரியா மூடையை 11,500 ரூபாவுக்கு விற்பனை செய்ய பிரதிநிதிகள் ஒப்புக்கொண்டனர்.
கமநல அபிவிருத்தி அதிகார சபையினால் விவசாயிகளுக்கு தற்போது வழங்கப்படும் யூரியாவின் விலையை மேலும் குறைப்பது தொடர்பில் அமைச்சு கவனம் செலுத்தியுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.