Ads Area

இறக்காமம் வில்லு குளத்தில் நன்னீர் மீன் பிடியில் இருந்த நீண்டகால பிரச்சனைக்கான தீர்வு, அதற்கான அங்கத்துவம் மற்றும் அனுமதியும் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

 நூருள் ஹுதா உமர்


தேசிய சமாதான பேரவையின் அனுசரணையின் கீழ் "றுஹுணு லங்கா" நிறுவனத்தின் தலைவர் எம்.எஸ்.ஜௌபர் (நளீமி) அவர்களின் ஏற்பாட்டில் இறக்காமம் வில்லு குளத்தில் நன்னீர் மீன் பிடியில் இருந்த நீண்டகால பிரச்சனைக்கான தீர்வு, அதற்கான அங்கத்துவம் மற்றும் அனுமதியும் பெற்றுக் கொடுக்கும் நிகழ்வு இறக்காமம் பிரதேச செயலக கூட்ட மண்டபத்தில் இறக்காமம் பிரதேச செயலாளர் எம்.எஸ்.எம். றஸ்ஸான் (நளீமி) அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.


இந்நிகழ்வில் உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி.அஹமட் நஸீல், மற்றும் தேசிய சமாதன பேரவையின் சிரேஷ்ட திட்ட முகாமையாளர் அமில நுவான் மதுசங்க , தேசிய சமாதான பேரவையின் திட்ட முகாமையாளர் எம்.உவைஸ் மதானி (இஸ்லாஹி) , றுஹூனு லங்காவின் உயர்மட்ட உறுப்பினர்கள் உள்ளிட்ட காரியாலய உத்தியோகத்தர்கள் நன்னீர் மீன்பிடி சங்க  நிருவாகங்கள் மற்றும் இரு சமுகங்களின் சகோதரர்கள் என பலரும்  கலந்து கொண்டனர்.


கடந்த மாதம் இப்பிரதேசத்தில் நடைபெற்ற மாவட்ட ரீதியிலான தேசிய சமாதன பேரவையின் கூட்டத்தில் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் அவர்களினால் முன்வைக்கப்பட்ட இம் முன் மொழிவினை றுஹூனு லங்கா நிறுவனமும் தேசிய சமாதான பேரவையும் நிறை வேற்றியுள்ளது.


இறக்காமம் வில்லு குளத்தை அண்டிய குடிவில் மற்றும் மாணிக்கமடு  பிரதேசத்தில் வாழ்கின்ற தமிழ் மக்களுக்கு மீனவர் சங்கங்களில் அங்கத்துவம் இல்லாததால் அவர்களுக்கான நன்னீர் மீன் பிடித்தலுக்கான அனுமதி மறுக்கப்பட்டு வந்தது.


இதனால் நீண்ட காலமாக இரு இனங்களுக்குள் கானப்பட்ட  நன்னீர் மீன்பிடிக்க தேவையான  அனுமதிப்பத்திரம் இல்லாத பிரச்சனைக்கு தீர்வு பெற்றுக் கொடுத்து அம்மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த வேண்டும் என்ற நன்நோக்கத்தோடு இறக்காமம் பிரதேச செயலாளர் மற்றும் உதவி பிரதேச செயலாளர் ஆகியோர்களினால் மேற்கொண்ட முயற்சியின் பயனாக பதிவு செய்யப்பட்டுள்ள நன்னீர் மீன்பிடி சங்கங்களுக்கு மத்தியில் பல சுற்று பேச்சு வார்த்தைகள் இடம் பெற்று இறுதியாக கடந்த 2023.03.22 ஆம் திகதி தமிழ் மக்களுக்கு மீனவ அங்கத்துவமும் அனுமதி பத்திரமும் வழங்குவதற்கு அனைத்து ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டது.




Youtube Channel Image
Third Eye Info Subscribe my youtube channel
Subscribe