நூறுல் ஹுதா உமர்
உலக வங்கியினால் அமுல்படுத்தப்பட்டு வரும் ஆரம்ப பராமரிப்பு சுகாதார நிறுவனங்களை மேம்படுத்தும் PSSP எனும் திட்டத்தின் கீழ் தெரிவு செய்யப்பட்ட மருதமுனை பிரதேச வைத்தியசாலையின் சமுதாய மட்ட குழுக்களை அங்குரார்ப்பணம் செய்யும் வைபவம் வைத்தியசாலையின் வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.எல்.எம். மிஹ்லார் தலைமையில் இடம்பெற்றது
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஐ எல் எம் ரிபாஸ் அவர்கள் பிரதம அதிதியாக கலந்து கொண்ட குறித்த நிகழ்வில் மிக காத்திரமான ஆழமான கருத்துக்களுடன் கூடிய உரை ஒன்றையும் நிகழ்த்தியதுடன் வைத்திய சாலையின் இவ்வாறான செயற்பாடுகளுக்கு ஒத்துழைக்கும் சமுதாய மட்ட குழுக்களுக்கு நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் இந்நிகழ்வில் பணிமனை பிரதி பணிப்பாளர் டாகடர் எம்.பீ.ஏ வாஜித் மற்றும் திட்டமிடல் பொறுப்பு வைத்திய அதிகாரி எம் சீ.எம் மாஹிர் ஆகியோரும் தென்கிழக்கு பல்கலைக்கழகத்தின் இஸ்லாமிய கற்கைகள் மற்றும் அரபு மொழிகள் பீடத்தின் முன்னாள் பீடாதிபதி பேராசிரியர் எம்.எஸ்.எம். ஜலால்தீன், கல்முனை பிரதேச செயலாளர் ஜே.லியாகத் அலி ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்